பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 315 கக்ரீவனா பேசுகிறான்? இவ்வாறு மாருதி கூறியவுடன், இராகவன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான். ஏன் தெரியுமா? அவன் வீடணனுக்கு அடைக்கலம் தர முடிவு செய் துள்ளான் எனினும், ஜனநாயக வாதி ஆதலால் உடன் உள்ள மந்திரக் கிழவர்களை ஆலோசனை கேட்டான். அவனுடைய துரதிர்ஷ்டம், ஒருவன் கூட அவன் மனக்கருத்தைப் புரிந்துகொள்ளவில்லை. ஏதோ தன்னை மதித்து அவன் கேட்டுவிட்டானே என்ற எக்களிப்பில் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர். அதிலும் வேடிக்கை என்னவென்றால், அடைக்கலம் என்று கூறி, அண்ணன் கட்சியைக் கேளாமலேயே அவனிடம் பகை உண்டாக்கி, வாலியைக் கொல்வித்தவனாகிய சு க்ரீவன், தன் கருத்தைப் பேசும்போது, வீடணன் அண்ணனை விட்டு வந்தது நியாயமோ என்ற கருத்தில், “தம்முனைத் (அண்ணன்) துறந்தது தரும நீதியோ?” (59) என்று பேசும் அளவுக்கு அவன் அறியாமை விரிந்து கிடக்கிறது. அதிலும் வேடிக்கை என்னவென்றால், எந்த இராமனைக் கொண்டு தன் அண்ணனைக் கொன்றானோ, அந்த இராமனிடமே, இப்பொழுது இப்படிப் பேசினால், இராமன் சிரிக்காமல் இருந்தது வியப்பே ஆகும். பேர் அறிவாள! நன்று இப்படிப்பட்டவர்களைப் பார்த்துதான் இராகவன் நும் கருத்து யாது?’ என்று கேட்டுவிட்டான். அனைவரும் ஒருமுகமாக அவன் கருத்துக்கு விரோதமாகப் பேசிய நிலையில், அவனைக் காப்பாற்ற அவன் கருத்தை எடுத்துக்கூற நாதி இல்லாத நிலையில், அனுமன் சமய சஞ்சீவியாக வந்து, இராமன் கருத்துக்கு அரண் செய்தான் என்றாலும், அவர்கள் அனைவரும் தலைவர்கள். எனவே இராமன், -