பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 317 ஒரு பொருள் உண்டு. ஏனையோர் அனைவரும், ஏற்பட்டுள்ள பிரச்சினையை அறிவு பூர்வமாக அணுகிக் குறைவு நிறைவு காணாமல், உணர்ச்சி வசப்பட்டுப் பேசினர். அறிவினால் ஆராய வேண்டிய பிரச்சினையை உணர்ச்சி அடிப்படையில் ஆய்ந்தால், விளைவது ஆபத்துத்தான். இவர்கள் குறைபாட்டை நன்கு அறிந் துள்ளான் ஆகலின், இராமன் பேசும்போதே தும் உணர்வினால் ஒப்புற நோக்கி இயம்புவீர் (55) என்று கூறினான். அதே இராகவன் மாருதியை நோக்கி 'உன் கருத்து யாது’ என்று கேட்கும்போது 'அறிவினை நோக்கினான், அறிவின் மேலுளான் (83) என்று கூறுகிறான் கவிஞன். அதே காரணத்தால்தான் பேர்அறிவாள, நன்று நன்று' என்று மாருதியைப் புகழ்ந்துவிட்டு, அவர்கள் அனைவருக்கும் சிந்திக்க இடம் கொடாமல், சாதுரியத் தினால் இராகவன் இதோ பேசுகிறான். மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி, அன்னது அன்று எனின், பிறிது ஒன்றானும் வெற்றியே பெறுக, தோற்க, வீக வியாது வாழ்க, பற்றுதல் அன்றி உண்டோ, அடைக்கலம் பகர்கின் றானை? (வீடணன் அடைக்கலப் படலம்-105) (வேறு பேசுவதற்கு என்ன உளது: மாருதி ஆராய்ந்து சொன்ன ஆராய்ச்சியே சிறந்த காரியம். அது அல்லாமல் மற்றொன்றைக் கடைப்பிடிப்பதால் வெற்றி தோல்வி எது வரினும் சரி, சாவு வாழ்வு எது வரினும் சரி அடைக்கலம் என்று வந்தவனை ஏற்றுக்கொள்வது தவிர வேறு உண்டோ?)