பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 + கம்பன் - புதிய பார்வை சரணாகதியை ஏற்பதே சிறந்தது இராமன் இதில் தொடங்கி, 15 பாடல்களில் அடைக்கலம் ஏற்பதன் சிறப்பையும், அதனை ஏற்காது மறுப்பதன் இழிவையும் விரிவாகப் பேசுகிறான். இப் பாடல்களைப் படிக்கும்போது ஒர் ஐயம் தோன்றத்தான் செய்கிறது. சுக்ரீவன் வீடணன் சரணம் என்று வரவில்லை; அது நடிப்பு என்கிறான் (68. சாம்பன் சரணமடைய வந்தான் என்று கூறவில்லை. நீலனும் சரணம் பற்றிப் பேசவில்லை. அப்படி இருக்க, அனுமன் ஒருவன் மட்டும், தான் பேசும் 16 பாடல்களில், ஒரே ஒரு முறை அபயம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறான். அப்படி இருக்க, 'அபயம் என்று அடைந்தவர்களைக் காத்தலே கடன் என்று இராகவன் விரிவாகப் பேசக் காரணம் யாது? வேறு காரணம் காட்டி வீடணனை ஏற்பதைச் சுக்ரீவன் முதலியோர் மறுப்பதற்கு இடம் உண்டு. ஆனால் சரணம் என்று கூறிவிட்டால், மறுப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும். எனவேதான் சரணம் என்ற சொல்லை ஒரு முறை அனுமன் பயன்படுத்தினாலும், அதை அப்படியே பற்றிக்கொண்டு, தன் கருத்தை அச்சொல்லின் மேலேயே வைத்துக் காட்டுகிறான் இராகவன். இராகவன் அரசியல் ஞானி இவை எல்லாவற்றையும் விட அற்புதமானது இராகவன் முடிப்புரை. மாருதி தவிர யாருமே பயன் படுத்தாததும், ஏற்றுக் கொள்ளாததும் ஆகிய, "அபயம்சரணம் என்பவற்றை அவர்களே கூறியதாகக் கூறி, ஒரு முடிவுக்கு வருகிறான் இராகவன். ஆதலான், அபயம் என்ற பொழுதத்தே, அபய தானம் ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினி, என்பால் வைத்த