பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 319 காதலால்; இனிவேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த! கோது இலாதவனை நீயே, என்வயின் கொணர்தி என்றான் (வீடணன் அடைக்கலப் படலம்-17) (ஆதலினால் அவன் அபயம் என்று கூறின உடனேயே, என்பால் வைத்த அன்பினால், அபயதானம் தருதல்தான் கடன் என்று கூறினர்கள். இனி ஆராயவேண்டியது ஒன்றும் இல்லை. சூரியன் மைந்தனான சுக்ரீவனே! நீயே சென்று குற்றமில்லாத வீடணனை என்பால் அழைத்துவா என்றான்.) இராகவனைப் போன்ற அரசியல் தந்திரம் வல்ல ஒருவனால்தான், இக்கட்டான இந்த நிலையைச் சமாளிக்க முடியும். 'என்மேல் வைத்த அன்பால் அபயதானம் அளிப்பதே என் கடமை என்று கூறினர்கள் என்று கூறுவது எத்துணை அற்புதமானது! ஒருவரும் சொல்லாத சொற்களை, அவர்களே சொன்னதாகச் சொல்கிறான். 'இல்லை என்று அவர்கள் மறுக்காமல் இருக்க, என்பால் வைத்த காதலால்' என்று வேறு ஒரு காரணம் காட்டுகிறான். இப்பொழுது நாங்கள் சொல்லவில்லையே' என்று. மறுப்பதானால், இராமனிடம் அன்பில்லாதவர்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்படுவர். எனவே இப்பொழுது எதனையும் மறுக்க முடியாது. அதுமட்டுமன்று, இந்த நேரத்தில் அவர்களுடைய மனத்திலும் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. ஏதோ தாங்களே இந்த அறவுரையைக் கூறியது போலவும், அதனை இராகவன் ஏற்றுக் கொண்டது போலவும், அவர்கள் மனத்தில் ஒரு மகிழ்ச்சி நிறையுமாறு செய்துவிட்டான் காகுத்தன். இத்தனைக்கும் மூலமாக இருந்த அனுமனை ஏன் இப்பொழுது குறிக்காமல் விட்டான்? வெறும் புகழ்ச்சிக்கு மகிழ்பவன் அல்லன் அனுமன். மேலும், சுக்ரீவன் முதலானவர்கள்