பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அ. ச. ஞானசம்பந்தன் 321 மேரு கிரிக்கும் மீதுஉற நிற்கும் பெருமெய்யிர்; மாரி துளிக்கும் தாரை இடுக்கும், வரவல்லீர்; (மேரு மலையைவிடப் பெரிய உடம்பை எடுக்க வல்லீர் மழைத்துளி விழும் தாரைக்குள்ளும் புகுந்து வர வல்லீர்.) - போர்முன் எதிர்ந்தால் மூவுலகேனும் பொருள் ஆகா; ஒர்வுஇல் பலங்கொண்டு, ஒல்கல்இல் வீரத்து உயர்தோளிர். (மயேந்திரப் படலம்-10, 12, 14) (போர் எதிர்ப்பட்டால் மூவுலகையும் வெல்லும் ஆற்றலுடையீர்! தளர்தல் இல்லா வீரமும் வெற்றியுங் கொண்ட தோளிர்!) அடங்கவும் வல்லிர், காலம் அது அன்றேல், அமர்வந்தால் மடங்கல் முனைந்தா லன்ன வலத்தீர்; - (மயேந்திரப் படலம்-17) (காலம் சரியில்லை எனின் அடங்கி இருக்கவும் வல்லீர், சிம்மம் முனைந்தது போலப் போரிடும் வன்மையும் உடையீர்.) . இவ்வாறு பேசுகிறான் சாம்பன். அனுமன் இதுவரைத் தன் வன்மையைத் தான் அறியான். அவனிடமுள்ள சிறப்பே அதுதான். சாம்பன் கூறும் முறையில் அனுமன் ஆற்றலில் உள்ள தனிச்சிறப்பும் வெளிப்படுத்தப்படுகிறது. எத்துணை ஆற்றல் உடையவர்களும், காலம், இடம் அறிந்தே செயல்பட வேண்டும் என்று கட்டளை விதிக்கின்றது அறநூல். காலம் அறிதல் பற்றிக் கூறவந்த குறள், பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது (திருக்குறள்-48)