பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 கம்பன் - புதிய பார்வை ೯7೯ಕp பேசுகிறது. அனுமன் காலமறிந்து வினை செய்பவன் என்பதனைச் சாம்பன் அடங்கவும் வல்லீர் என்று கூறுகிறான். ஆற்றலின் அடித்தளம் இவ்வளவும் கூறிய பிறகு இத்துணை ஆற்றல் அனுமனிடம் எவ்வாறு வந்தது? இத்துணை ஆற்றல் உடைய அவன் இவ்வளவு அடக்கத்துடன் வாழக் காரணம் என்ன? என்பவற்றிற்கு விடை கூறுபவன் போலச் சாம்பன் பேசுகிறான். நீதியில் நின்றிர் வாய்மை அமைந்தீர் நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்; மறை எல்லாம் ஓதி உணர்ந்தீர்! ஊழி கடந்தீர் உலகு ஈனும் ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர், - (மயேந்திரப் படலம்-15) (அறத்தில் நின்று, வாய்மை காத்து, மனத்தாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர், அனைத்துக் கலைகளையும் ஓதி உணர்ந்தீர். பல ஊழிக்காலம் வாழ்கின்றீர்) நீதியில் சலியாது நிற்றலும், வாய்மையை விடாது கடைப்பிடித்தலும், பொய்யை விலக்குதலும், நினைவிற்கூட மாதர் நலம் பேணாதிருத்தலும் யாருக்கு முடியும்? ஒரே வரியில் விடை கூற வேண்டுமெனில் புலனடக்கத்தைப் பின்பற்றி அதில் வெற்றி கண்டவர்கட்கே மேலே கூறியவை இயலும். எனவே அனுமனின் பலம், கேவலம் உடல் வன்மை மட்டும் அன்று; மனவலிமை மட்டுமன்று; தவவலிமை மட்டுமன்று; ஆன்ம வலிமையும் உடன் சேர்ந்ததாகும். எனவேதான் செயற்கு அரியவற்றை எளிதில் செய்யக்கூடிய பெரியவனாக அவன் நிற்கின்றான். இவை அனைத்துடன் கூடப் பணிவு எவ்வாறு கிடைத்தது?