பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 + F- ஞானசம்பந்தன்ئ .Hئي நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது. திருக்குறள்-419) என்பதற்கேற்ப, நுணங்கிய கேள்வி மேலோனாக அனுமன் இருந்தான். 'மறை எல்லாம் ஓதி உணர்ந்தீர்' என்றும், பகலோன் தேர்முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர் (14) என்றும் சாம்பன் கூறுவதிலிருந்தும், இராகவன் இவன் கல்லாத கலையும் வேதக் கடலுமே இல்லை’ என்பதிலிருந்தும், அவன் கல்விப் பெருக்கத்தை அறிய முடிகிறது. இத்துணைக் கல்வியும், கேள்வியும் விழலுக்கு இறைத்த நீராக மாறி, அவனுடைய அகங்காரத்தை வளர்க்கவில்லை என்றால், அவன் கல்வி, உண்மையிலேயே பயனுடைய கல்வி, என்பதை அறிய முடிகின்றது. இக்கல்விப் பெருக்கமும், பண்பாடும், நல்லொழுக்கமும், புலனடக்கமும் உடைய ஒருவன் இவற்றுள் எதுவும் இல்லாத சுக்ரீவனிடம் பணிபுரிய நேர்ந்தது விதியின் விளையாட்டுப் போலும். அப்படி இருந்தும், தன் தலைவனுக்கு அடங்கியவனாய், அவனுடைய நம்பிக் கைக்குப் பாத்திரமானவனாய், அவனுடைய நல்வாழ்வுக்கு வழி தேடுபவனாய், அவனிடம் நன்றி பாராட்டுபவனாய் வாழ்ந்தது அனுமனின் பெருமையைப் பல மடங்கு உயர்த்துகிறது. அனுமனை அறிந்தவன் வாலியே! இதிலும் ஒரு வேடிக்கை அமைந்துள்ளதைக் காணலாம். அனுமன் சுக்ரீவனிடம் பணிபுரிகின்றான். அவனிடம் பணிபுரிபவர் யாரும், இவனுக்குச் சமமானவர் ஆகார். சுக்ரீவன் இவனுடைய அருமை பெருமைகளை அறிந்துகொண்டதாகவோ, அதற்கேற்ற ஓர் இடத்தை அனுமனுக்குக் கொடுத்ததாகவோ தெரியவில்லை. ஆனால், அந்தச் சுக்ரீவனின் பகைவனாகவும், அண்ண னாகவும் அமைந்த வாலி, அனுமனை உள்ளவாறு