பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 15 பயின்று அதன் வழித் தம் நூலை இயற்றினாரா என்றும் அறிய முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி. வான்மீகத்தை இவர் அறிந்திருந்தாலும், அறியாமல் இத்தமிழ் நாட்டில் வழங்கிய செவி வழிக் கதையை மூலமாக வைத்துக்கொண்டு தம் நூலை ஆக்கியிருந்தாலும், ஒன்றைக் கடைப்பிடித்தார் என்பதை அறிய முடிகிறது. 'மதியுடம் பட்ட மடக்கண் சீதை' என்று பாடினார் என்றால், வடநாட்டுக் கதையைத் தமிழ்மரபு கெடாதபடி பாடினார் என்பது உறுதியாகிறது. சிலப்பதிகாரத்தின் பின்னர், ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தோன்றிய மணிமேகலையிலும் இராமகாதையின் நிகழ்ச்சி ஒன்று பேசப்படுகிறது. காயசண்டிகை என்னும் பெண், யானைத்தி என்னும் நோயால் பீடிக்கப் பெற்றாள். எவ்வளவு உண்டாலும் அவள் பசி அடங்குவதில்லையாம். வாய்வழிச் சென்ற உணவு அவள் பசியை அடக்காமல் மறைந்த புதுமைக்கு உவமை கூறும் முறையில், இராமன் சேதுவில் அனை கட்டியபொழுது குரங்குகள் எடுத்து எறிந்த கற்கள் கடலினுள் சென்று மறைந்து விட்டதைக் கூறுகிறாள். நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல் அருமுந்நீர் அடைத்த ஞான்று குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம். அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு” (உலக அறவி புக்க - காதை 9-13) (நெடியோன்-திருமால் மயங்கு-அவித்தை அடல் அரு முந்நீர்-வலிமை மிக்க கடல், அளக்கர்-கடல்.) எனவே சங்கப் பாடல்களில் தொடங்கிய இராம காதை நிகழ்ச்சிக் குறிப்புகள் அவற்றை அடுத்துத் தோன்றிய நூல்கள் பலவற்றிலும் இடம்பெற்றதை அறிய முடிகிறது. என்றாலும் பாரதக் கதை இடம்பெற்ற