பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 325 கொண்டு, அவன்மீது எல்லையற்ற மதிப்பும் மரியாதையும் கொண்டுவிடுகிறான். எனவே, வாலியின் சொற்களுக்கு அதிக மதிப்புத் தரும் நிலையில் உள்ளான். இப்பொழுது அதே வாலி அனுமனைப் பற்றி இராமனிடம் பேசுகிறான். அனுமன் என்பவனை ஆழிஜய! நின்செய்ய செங்கைத் தனு எனநினைதி; (வாலி வதைப் படலம்-137) (ஐயனே! அனுமன் என்பவனை உன் கையிலுள்ள கோதண்டமாகிய வில் என்றே நினைப்பாயாக.) இவ்வாறு வாலி பேசியது வியப்பைத் தருவதாகும். இராமன் அனுமனை நன்கு அறிந்திருந்தாலும், வாலியின் பேச்சு, அவனுள் ஒரு புதிய எண்ணத்தையே உண்டாக்கி இருக்க வேண்டும். இராகவன் செய்ய செங்கையில் உள்ள கோதண்டம் என்ற வில்தான் அவதார நோக்கத்தை நிறைவேற்றித் தசரதன் மகனாகிய இராமனைக் கோதண்ட ராமனாகப் பெயர் மாற்றியது. கோதண்டத்திலிருந்து இராமனைப் பிரிக்க முடியாது. கோதண்டத்திற்கு என்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை. தன்னைத் தாங்கிய இராமன் மனத்தில், என்ன நினைத்துத் தன்னைப் பயன்படுத்துகிறானோ, அந்த எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய ஒரே கடமைதான் கோதண்டத்திற்கு இராமன் பயன்படுத்தாத நேரத்தில் அஃறிணைப் பொருளாகிய அது, தனக்கென ஒரு தற்போதம் இல்லாமல், தன் தலைவன் தன்னை எங்கே எப்படி வைத்தானோ, அங்கே அப்படியே இருப்பதுதான் கோதண்டத்தின் இயல்பு. - பசு கரணம் பதி கரணம் ஆனவன் இங்கு அந்த வில்லுக்குக் கூறிய அனைத்தும் அனுமனுக்கும் பொருந்தும். பிராட்டி இருக்கும் இடத்தைக்