பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 327 உணர்ச்சியும் தணித்தலும் இராமனுக்குத் தீங்கு செய்தவர்கள் என்று கண்டால் இவனும் உணர்ச்சி வசப்படுவான். ஆனால் அந்த உணர்ச்சி வரம்பு கடந்து போகாமல், அவனுடைய அறிவு துணை செய்கிறது. பிராட்டியை நாடி இலங்கை சென்று இராவணன் அரண்மனையுள்ளும் கட்புலனாகாச் சிறுவடிவுடன் நுழைந்து சுற்றி வருகிறான். உறங்கும் கும்பகர்ணனைக் கண்டு இவன்தான் இராவணன் என்று தவறாக நினைக்கிறான். நினைந்த உடன் பிராட்டியைக் கவர்ந்த கள்வன் என்ற எண்ணம் தோன்றுகிறது. உடனே எல்லையற்ற சினங்கொள்கிறான். ஆனால், அடுத்த வினாடி அறிவு தொழிற்படுகிறது. இராவணன் பத்துத் தலைகளும், இருபது கரங்களும் உடையவன்; இவனுக்கு அவை இல்லை. எனவே, இவன் இராவணன் அல்லன், என்ற முடிவுக்கு வந்தவுடன் சினம் மறைகிறதாம். குறுகி நோக்கி, மற்று அவன் தலை ஒருபதும், குறித்த இறுகு திண்புயம் இருபதும், இவற்கு இலை என்னா, மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெங்கனலை, அறிவு எனும் பெரும் பரவை அம்புனலினால், அவித்தான் - - - (ஊர் தேடு படலம்-13) தூய வீரனாகிய அனுமன், இராவணனை எல்லா வகையிலும் ஒத்த வீரம் உடைய கும்பகன்னனை, இராவணனோ என்று சந்தேகித்தது. அவனுடைய நுண்மாண் நுழை புலத்தையே காட்டும். உறங்கும் வீடணனைக் கண்டு 'குற்றம் இல்லது ஒர் குணத்தினான் (137) என்று முடிவு செய்தான். உடற்கூறு கண்டு எடை போடுதல் இன்னும் பல இடங்கள் கடந்து சென்று ஒப்பற்ற வீரன் ஒருவன் உறங்குவதைக் கண்ணுறுகின்றான். அவன் மனத்திரையில் ஒடிய எண்ணங்களைக் கவிஞன் கூறுகிறான்.