பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 கம்பன் - புதிய பார்வை 'வளையும் வாள்.எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ?-- அளையில் வாழ் அரி அனையவன்யாவனோ? அறியேன். இளைய வீரனும், ஏந்தலும் இருவரும் பலநாள் உளைய உள்ளபோர் இவனொடும் உளது என உணர்ந்தான். இவனை இன்துணை உடையபோர் இராவணன், என்னே? புவனம் மூன்றையும் வென்றது ஒர் பொருள் எனப் புகறல்? சிவனை, நான்முகத்து ஒருவனை, திருநெடு மாலாம் அவனை, அல்லவர் நிகர்ப்பவர் என்பதும், அறிவோ? (ஊர் தேடு படலம்-141, 142) (வளைந்த பற்களை உடைய அரக்கனோ மழுப்படை யுடைய சிவபிரான் மகன் முருகனோ? குகையில் உள்ள சிங்கத்தை ஒத்தவன் யாவனோ அறியேன். இளைய வீர னாகிய இலக்குவனும், இராமனும் பலநாள் கடுமையாகப் புரிய வேண்டிய போரை, இவனுடன் நிகழ்த்த வேண்டி வரும. - இத்தகைய ஒரு வீரனை, இனிய துணையாகப் பெற்றுள்ள இராவணன், மூன்று உலகத்தையும் வென்றுள்ளான் என்று கூறுவது, பொருளற்ற சொற்களாம். மும்மூர்த்திகளுள். யாரேனும் ஒருவருடன் ஒப்பிடுவதன்றி வேறு கூறுவதும் அறிவுடைமை ஆகுமோ) - இந்த இரண்டு பாடல்களும், இன்னான் என்று தெரியாமல் இந்திரசித்தன் உறங்கும் நிலையில், அவனைக் கண்டு, அனுமன் கூறிய சொற்களாகும். உறங்குகின்ற