பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் r 329 நிலையிலும், ஒருவன் இன்னான் என்று தெரியாத நிலையிலும் அவனையும், அவன் வீரத்தையும் இவ்வளவு நுண்மையாக அளவிடும் வீரன் எத்தகையவனாக இருத்தல் வேண்டும் என்பதைச் சிந்தித்தல் வேண்டும். பகைவனை மதிக்கத் தெரிந்தவன் - அனுமன், அவன் எதிரிகளான இந்திரசித்தன், இராவணன் ஆகிய மூவரும் ஒப்பற்ற வீரர்கள். தவபலம், வரபலம், கல்வி, கேள்வி, ஞானம் ஆகிய அனைத்தும் உடையவர்கள். இவர்கள் யார் யாருடன் போரிட்டாலும்; ஒருவரை மற்றவர் கொல்வது என்பது இயலாத காரியம். அத்தகைய வீரர்களாயினும், இவர்களுக்குள் இருக்கும் தாரதம்மியத்தை ஆய்தல் பயனுடையதாகும். து.ாய வீரம் படைத்த அனுமன், கும்பகன்னனையும், இந்திரசித்தனையும், உறங்கும் நிலையில் கண்டுங்கூட, அவர்கள் ஆற்றலை நுணுக்கமாக எடை போட்டானே! ஆனால் இந்திரசித்தன் போர்க்களத்தில் நேரே அனு மனுடன் பொருகின்றவரை சுள்ளியில் இருந்து உறை குரங்கு; பூவின் தேன் உண்குரங்கு என்றுதான் பேசுகிறான். அக்ஷய குமரன் இறந்த பிறகும், சம்புமாலி, கிங்கரர், பஞ்சசேனாபதிகள் இத்துணைப் பேரையும், யானை, குதிரை, தேர் முதலியன எவையும் இல்லாமல், கையில் ஒர் ஆயுதமும் இல்லாமல், தான் ஒருவனாகவே நின்று அழித்துள்ளான் அனுமன் என்றாலும், இந்திரசித்தன் அவன் வீரத்தை மதிக்கத் தயாராக இல்லை. அதே நேரத்தில் அலட்சிய மனப்பான்மையும் உடன் எழுகிறது. இராவணனிடஞ் சென்று, - "கிங்கரர், சம்பு மாலி, கேடு இலா ஐவர் என்று இப், பைங்கழல் அரக்க ரோடு உடன்சென்ற பகுதிச் சேனை