பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 + கம்பன் - புதிய பார்வை இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல், குரங்கு அது எந்தாய்! சங்கரன், அயன், மால் என்பார் தாம் எனும் தகையது ஆமே!’ (பாசப் படலம்-10) என்று இவ்வாறு அனுமனைப் பற்றிப் பேசும் இந்திர சித்தன், ஒரு சில வினாடிகளில் மனம் மாறி, ஆயினும் ஐய! நொய்தின் ஆண்தொழில் குரங்கை யானே ‘ஏ’ எனும் அளவில் பற்றித் தருகுவென்.............. * - (12) என்று பேசுகிறான் என்றால், இதிலிருந்து அறிய வேண்டியது ஒன்றுளது. பகைவரைக் குறைத்து மதிக்கும் தவற்றை, மறந்தும் அனுமன் செய்யவில்லை. ஆனால், பகைவன் ஆற்றல் தெரிந்தும், அதனைக் குறைத்து மதிக்கும் தவற்றை இந்திரசித்தனும், இராவணனும் செய்கின்றனர். எனில், அதன் காரணம் யாது? அகங்காரம் ஒன்றினால் மூடப்பட்ட இந்திரசித்தன். இராவணன், இருவரும் தத்தம் வீரத்தில் கொண்ட நம்பிக்கை, நம்பிக்கை நிலையைக் கடந்து அகங்காரமாக மாறி, உலகத்தில் தம்மை ஒத்தவர் யாரும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வரத் தூண்டிவிட்டது. அகங்காரம் மறைக்கும் இவ்வாறு அகங்காரம், ஒரு மனிதனுடைய அறிவு, அனுபவம் என்ற அனைத்தையும் மறைத்துவிடுமா என்று ஐயங்கொள்ளத் தேவை இல்லை. இன்று நம் காலத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற இட்லர் போன்றவர் இதற்கு உதாரணம் ஆவர். இந்த அகங்கார வெறி பிடித்தவர்களை மாற்றுதல் இயலாத காரியம். ஆனால் இதன் எதிராக, அனுமன் மட்டும் எவ்வாறு பகைவனையும் மதித்துப் போற்றும்