பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 + கம்பன் - புதிய பார்வை அம்மலை கும்பன் தோளில் பட்டுப் பொடியானது. அவன் கண்ணைக்கூட இமைக்கவில்லை. அதுகண்ட அனுமன், 曼éé哆哆幽空é治海曙 蛤明é姆领影登 郎இவனது ஆற்றல் அளக்குறற் பாலும் ஆகா: குலவரை அமரின் ஆற்றா; துளக்குறும் நிலையன் அல்லன்; சுந்தரத் தோளன் வாளி பிளக்குமேல், பிளக்கும் என்னா, மாருதி பெயர்ந்து போனான். (கும்பகருணன் வதைப் படலம்-203) என்று மனமாரப் பாராட்டுகின்றான். அதைவிடச் சிறப்பு என்னவென்றால் சுந்தரத் தோளனாகிய இராமன் அம்பு ஒருவேளை இவன் தோளைப் பிளந்தாலும் பிளக்கலாம் என்று கூறுகிறான். இராம பாணம் கூட ஒருவேளை பிளக்க முடியாமல் போனாலும் போகலாம் என்று அனுமனே கூறுவது வியப்புக்குரியது. முதற் போர்புரி படலத்திலேயே அனுமன் இராவண னைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. அனுமன் இராவணன் இருவரும் ஒருவரை ஒருவர் ஒவ்வொரு குத்துக் குத்த வேண்டும் என்றும், அதில் வலி குன்றியவர் மறுபடி போரிடக் கூடாது என்றும் ஒரு சூளுரை செய்து கொண்டனர். அவ்வாறு அனுமன் கூறியவுடன், இராவணன் அவனைப் புகழ்ந்து பேசுகிறான். வீரர்க்கு உரியது சொற்றனை;விறலோய்!-ஒரு தனியென் நேர்நிற்பவர் உளரோ? பிறர் நீ அல்லவர்? இனி, நின் பேருக்கு உலகு அளவே இனி உளவோ பிற?......... - (முதற் போர் புரி படலம்-157)