பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 + கம்பன் - புதிய பார்வை அளவுக்கு இராமகாதை இடம்பெறவில்லை என்பதும் தெளிவு. சிலப்பதிகார ஆசிரியர் சைனராயினும் பிற சமய நம்பிக்கைகளைப் பாடும் பொழுது அச்சமயத்தார் கொள்கைக்கு முரண்படாதபடி பாடுபவர் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அவர் காலத்தில் இராமன் திருமாலின் அவதாரம் என்ற கருத்து வலுப்பெற்றிருந்தமையின் தாதை ஏவலின்’ என்ற பகுதியில் காடு சென்ற இராமன் வேத முதல்வனாகிய நான்முகனைப் பயந்த திருமாலே என்று கூறுகிறார். பின்னர் வந்த மணிமேகலை ஆசிரியரும், இராமன் திருமாலின் அவதாரம் என்பதை மறுக்கவில்லை. அவர்காலச் சூழ்நிலை, நம்பிக்கை என்பவற்றைப் பின்பற்றி மறைக்காமல் கூறிவிடுகிறார். ஆனால் திருமால் மனிதனாகப் பிறந்தது அவருடைய கருணையால் என்பதைக் கூற அந்தச் சுருங்கிய மனமுடைய பெளத்தருக்கு ஏற்கவில்லை. எனவேதான் மயக்கத்தினால் (அவித்தையால்) நெடுமால் இராமனாகப் பிறந்தான் என்று கூறுகிறார். அவருடைய சொந்த விருப்பு வெறுப்புகளை நீக்கிவிட்டுக் கண்டால் ஒரு கருத்து உறுதிப்படுகிறது. இராமன் திருமாலின் அவதாரம் என்பதை ஏறத்தாழச் சங்க காலத்திலிருந்தே இத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டு வந்துள்ளனர் என்பதே அக் கருத்தாகும். ஆழ்வார்களின் முற்பட்ட கருத்து இத்துணை விரிவாக இதனைக் கூறுவதற்கு இரண்டு. காரணங்கள் உண்டு. முதலாவது இன்றும் சிலரால் பேசப்படும் கருத்து ஒன்றை மறுக்க வேண்டிய இன்றி யமையாமை நேர்ந்துள்ளது. வான்மீகி கூறிய மனித இராமனை தெய்வமாகக் கம்பன் கூறுவதற்கு முக்கியமான காரணம் ஆழ்வார்களின் பாடல்களே என்று சிலர் இன்றும் கூறுகின்றனர். இராமன் திருமால் அவதாரம் என்பது ஆழ்வார்கள் காலத்தில் புகுத்தப்பட்ட புதுமையான கருத்து