பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 333 ஒன்று ஆயுதம் உடையாய் அலை; ஒரு நீ எனது உறவும் கொன்றாய்; உயர் தேர்மேல் நிமிர் கொடுவெஞ்சிலை கோலி, வன்தானை யினுடன் வந்த என் எதிர்வந்து, நின் வலியால் நின்றாயொடு நின்றார் இனி நிகரோ?... (168) முத்தேவர்கள் முதலாயினர்; முழு மூன்று உலகிடையே எத்தேவர்கள், எத்தானவர், எதிர்வார் இகல்; என்நேர் பித்தேறினர் அல்லால்? இடைபேராது, எதிர்மார்பில் குத்தே எனநின்றாய்; இது கூறும் தரம் அன்றால். முதற் போர் புரி படலம்-169) (ஒரு வீரனுக்குரிய சொற்களையே கூறினாய்! வலியாய்! உன்னையல்லாமல் ஒரு தனியே என்னுடன் நேர் நின்று போரிடுபவர்கள் உண்டா? நின் புகழுக்கு இவ்வுலகே அளவு. . ஒரு படைக்கலமும் இல்லை; ஒருவனாக நின்ற நீ என் மகனைக் கொன்றாய் (அக்க குமாரன்), உயர்ந்த தேரின் மேல் ஏறிக்கொண்டு, கொடுமையான வில்லையும் தாங்கி, வலிய சேனையுடன் வந்துள்ள என் எதிரே வந்து, உன் வலிமையே துணையாகக் கொண்டு நிற்கின்றாய்! இங்குள்ளவர் யார் உனக்கு நிகராவார்? முத்தேவர்கள், மூன்று உலகினும் உள்ள தேவர், தானவர் என்பார்களுள் என்னை எதிர்த்துப் போர் புரிவார் யார்? பித்தேறினவர்களே இது செய்யத் துணிவர். இம்மியளவும் இடம்பெயராது மார்பில் குத்து என நின்றாய்! இது கூறும் தரத்ததன்று.) இத்தகைய உரையாடலில், இரு பெரு வீரர்கள் ஒருவரை ஒருவர் மனமாரப் பாராட்டிக் கொள்ளுதலைக் காண முடிகிறது. அனுமன், இலங்கை வந்து சென்ற பிறகு