பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 + கம்பன் - புதிய பார்வை இராவணன்கூட அவனைக் குரங்கு என்று பேசுவதைத் தவிர்த்துவிட்டான் என்பதையும் அறிய முடிகிறது. இதன் பிறகு இருவரும் குத்திக்கொள்ள உடன்பட்டு, முதலில் அனுமன் இராவணனைக் குத்துகிறான். அக்குத்தால் இராவணன் தள்ளாடிய வடமேருவின் சலித்தானாம். சிறிது பொழுது கழிந்த பிறகுதான், இராவணனுக்கு உணர்வே வந்ததாம். அதன் பிறகு இராவணன், அனுமனைப் புகழ்ந்து இதோ பேசுகிறான். 'வலி என்பதும் உளதே? அது நின்பாலது; மறவோய்! அலி என்பவர், புறம் நின்றவர்; உலகு ஏழினும் அடைத்தாய்; "சலி என்று எதிர்மலரோன் உரை தந்தால், இறை சலியேன்: மெலிவு என்பதும் உணர்ந்தேன்; எனை வென்றாய், இனி விறலோய்! - (முதற் போர் புரி படலம்-18) (வலிமை என்பது உண்டு என்றால், அது உன்னிடந் தான் உளது ! உன்னையல்லாமல் பிறர் உள்ளவர் அனைவரும் அலிகளே! நான்முகன் என் எதிரே வந்து நீ கொஞ்சம் சலிப்பாய் என்று கூறினால்கூட ஒரு வினாடி சலிக்க மாட்டேன். (நீ குத்திய பிறகுதான்) தளர்ச்சி மெலிவு) என்பதும் உண்டு என அறிந்துகொண்டேன். எனை வெற்றி கொண்டுவிட்டாய்.) அடுத்துத் தான் குத்தப் போகுமுன் இராவணன் அனுமனைப் பார்த்து, 蝶始邻珍原● 路姆曾经晚否够爱姆 ‘என் ஒருகை «ه هه ده ده ه ه ها ه ها குன்றின் மிசை கடை நாள் விழும் உரும் ஏறு எனக் குத்த, நின்று, உன் நிலை தருவாய் எனின் நின் நேர் பிறர் உளரோ?