பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 335 இன்றும் உளை; என்றும் உளை; இல்லை, ஓர் பகை!' என்றான் (182) . (என் ஒரு கையினால் யுகாந்த முடிவில் குன்றின் மேல் விழும் ஆண் இடிபோல ஒரு குத்துக் குத்த நீ நின்ற உன் பழைய நிலையில் இருப்பாய் என்றால் உன்னை நிகர்ப்பவர் எவரும் இரார். இன்றும், என்றும் நீ இருப்பாய்! (சிரஞ்சீவி). பகை என்பது உனக்கிராது.) என்று கூறிவிட்டுக் குத்துகிறான். இக்குத்தால் அனுமன் இராவணனைப் போலவே சலித்துவிட்டான். ஆகலின் தாங்கள் செய்துகொண்ட உடன்படிக்கைப்படியே, ஒருவருடன் ஒருவர் இறுதிவரை, போரிடவே இல்லை. கம்பன் சங்கடம் பிரமாத்திரத்தால் இலக்குவன் முதல் யாவரும் கட்டுண்டு கிடக்கின்றனர். இராமன், தம்பி இறந்தான் என்று நினைந்து உணர்வு இழந்து கிடக்கின்றான். இந்நிலையில் சாம்பன் அனுமனிடம் மருத்துமலை கொணரச் சொல்கின்றான். அந்த வேளையில், மருத்து மலை வந்தால்தான், இலக்குவன் முதலானோர் பிழைப்பர் என்பதைக் கூறவந்த சாம்பன், எழுபது வெள்ளத் தோரும், இராமனும், இளைய கோவும் முழுதும் இவ்உலகம் மூன்றும், நல்அற மூர்த்தி தானும், வழுஇலா மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த! பொழுது இறை தாழாது, என்சொல் - - . நெறிதரக் கடிது போதி. (மருத்துமலைப் படலம்-23) என்று அனுமனிடம் கூறி, அவனை மருத்துமலை கொணர அனுப்புகிறான். அந்த வேளையில், இலக்குவன்