பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 கம்பன் - புதிய பார்வை அஸ்திரத்தால் கட்டுண்டு கிடக்க, இலக்குவன் நிலைகண்டு இராகவன் அவசமுற்றுக் கிடக்க, வீடணன், சாம்பன், இருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்த நிலையில் இராமன் மயக்கந் தெளிந்து எழுந்து, இலக்குவனே போனபின் யான் எதற்காக உயிர் வாழ வேண்டும்’ என்று கவன்று கூறுகிறான். அனுமன் மருத்துமலைக்குப் போனதைக் கூறி, உடன் வந்து விடுகிறான், எனச் சாம்பன் இராமனைத் தேற்றுகிறான். இந்தச் சூழ்நிலை கம்பனுக்கே, ஒரு கடக்கமுடியாத சூழ்நிலையை உருவாக்குகிறது. பரம்பொருளே இராமனாக வந்துள்ளான் என்று கதைப்போக்கை இதுவரை கொண்டு வந்துவிட்டான் கவிஞன். நாக பாசத்தைப் போக்கிய கருடனுக்கு, முன்பின் தெரியாத எங்கட்கு இத்தகைய உபகாரஞ் செய்த உனக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் (நாகபாசப் படலம் 267-26) என்று, இராமனைப் பேசுமாறு செய்கிறான் கம்பன். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு விதமாக உள்ளது. இங்கே இருந்து அப்பாவி போல் பேசு வதைக் காட்டிலும், அமரில் இறந்த அன்பர்களை அமரர் நாட்டிடைக் காண்பதே நலம் என்று பேசத் தொடங்குகிறான். இந்தத் தருணத்தில், சாம்பன் தனக்கே உரிய முறையில் 'இராமா, முடிகுவென் உடன் (81) என்று கூறுகிறாய். உன்னையே நீ இன்னான் என்று உணர்ந்து கொள்ள வில்லை. ஆனால் நீ யார் என்று முன்னமே நான் அறிவேன். அதை இப்பொழுது வெளியிடல் தீதாகும். தேவர்கட்கு அது முடியும். பின்னர் சந்தர்ப்பம் வரும் பொழுது விளக்கமாகக் கூறுவேன்' என்ற கருத்தில், உன்னை நீ உணர்கிலை; அடியனேன் உனை முன்னமே அறிகுவன், மொழிதல் தீது, அது, என் எனில், இமையவர் எண்ணுக்கு ஈனம் ஆம்; பின்னரே தெரிகுதி;-தெரிவில் பெற்றியோய்! - (மருத்துமலைப் படலம்-82)