பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 அ. ச. ஞானசம்பந்தன் 337 என்று பேசுகிறான். இலக்குவன் பிரமாத்திரத்தால் படினும் அது உன்னை ஒன்றுஞ் செய்யவில்லை என்பதை நினைத்துப் பார்! எனவே, என் சொற்களை நம்புவாயாக' என்று தேற்றிக் கொண்டிருக்கும் வேளையில், அனுமன் மலையுடன் வர, அனைவரும் உயிர் பெற்று எழுகின்றனர். உள்ளம் திறந்து பேசுகிறான் தம்பியைத் தழுவி மகிழ்ந்த இராகவன், தன்னை வணங்கி நிற்கும் அனுமனிடம் பேசுகிறான். இதுவரை அனுமனிடம் இராகவன் இப்படி உள்ளம் திறந்து பேசவேண்டிய நிலை ஏற்படவில்லை. காரணம் புலனடக்கம் பயின்ற இருவரும் வாய்விட்டுக் கூறாமலே, ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர். இராமனுடைய அகமனத்தில் ஒடும் எண்ண ஓட்டங்களை அனுமன் நன்கு அறிவான். ஆதலால் வாய்ப் பேச்சுக்குத் தேவை இல்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுதைய நிகழ்ச்சியும், சூழ்நிலையும், அனுமன் செய்த உபகாரத்தின் அளவும், இராமன் வாய்திறந்து பேசச் செய்துவிட்டன. ஒருவன் சாகப் போகின்ற காலத்தில் செய்த உதவிக்குக் கைமாறாக உயிரையே கொடுத்தாலும் அமையும். இன்று எம்முடைய உயிரை மட்டுமல்லாமல், எமக்கு வரும் பழியையும் வாராமல் காத்து, அடுத்து எங்கட்குள்ள பகையையும் காத்து, இனி எம்முடைய மரபையுங் காத்து, எமக்குரிய மறைகளையும் காத்தாய்' என்ற பொருளில், அழியுங்கால், தரும் உதவி, ஜயனே! மொழியுங்கால், தரும் உயிரும் முற்றுமே? பழியுங் காத்து, அரும் பகையும் காத்து, எமை வழியுங் காத்தனை, நம் மறையும் காத்தனை. (மருத்து மலைப் படலம்-11) என்று கூறினதுடன் அமையவில்லை இராகவன்.