பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 + கம்பன் - புதிய பார்வை உன் பிள்ளைகள் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த அதிர்ச்சி நீங்கியவுடன், அனுமன் உதவியின் ஆழம் தெரியத் தொடங்குகிறது. நன்றி உணர்வு பெருக்கெடுத்துப் பொங்குகிறது. அதன் பயனாகப் பேசத் தொடங்குகிறான் இராகவன், முன்னின் தோன்றினோர் முறையின் நீங்கலாது, என்னின் தோன்றிய துயரின், ஈறு சேர் - மன்னின் தோன்றினோம் முன்னம்; மாண்டுளோம்; நின்னின் தோன்றினோம், நெறியில் தோன்றினாய்! (மருத்து மலைப் படலம்-110) (எம் முன்னோர்களின் முறையின் நீங்காது வாழ்ந்து, என்னால் தோன்றிய துயரால் உயிரிழந்த மன்னனாகிய, தசரதன் பிள்ளையாகப் பிறந்த நாங்கள் இறந்துவிட்டோம். இப்பொழுது அறநெறியில் வாழும் உன்னிடத்துப் பிறந்தோம். என்று கூறியதன் அருமைப்பாட்டை அறிய வேண்டும். தான் மட்டும் இல்லாமல், தம்பியர் உட்பட அனைவருமே அனுமனிடத்தில் தோன்றியதாகக் கூறும் நன்றிப் பெருக்கினை அறிய வேண்டும். அனுமனை முதல் முதலில் கண்டபோது இவ்வுலகங்கட்கெல்லாம் அவன் ஆணி என்று கூறினான் அல்லவா? ஆணி என்பது யாது? வண்டி குடை சரியாமல் காப்பது கடையாணி தானே! அது போலத் தசரதன் குலமாகிய வண்டி குடைசாயாமல் இன்று அனுமன் காப்பாற்றி, இராமன் கூற்றை மெய்ப்பித்து விடுகிறான். காரைக்கால் அம்மையார் தலையினால் நடந்து, கைலை மலையில் ஏறும்பொழுது, உமையம்மை இறைவனைப் பார்த்து ஐயனே, அன்பே வடிவான இந்த எலும்புடம்புடன் வருபவர் யார்?' என்று கேட்டாராம். அதற்கு இறைவன்