பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 339. உமையே! வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை காண்!................. - . (காரைக்கால் அம்மையார் புராணம்-58) என்று விடை இறுத்தார் என்று சேக்கிழார் பாடிச் செல்கிறார். தாய் தந்தையற்ற பரம்பொருள் சமயத்தில் பெற்றோர் இல்லையே என்று வருந்தும் போலும்! தூய அன்பைப் பயன் கருதாது. செலுத்தபவர் எவராவது இருந்தால், அவர்களையே தனக்குத் தாய் தந்தையாகப் பரம்பொருள் வரித்துக் கொள்ளும் போலும்! இங்கு அனுமனைப் பார்த்து நெறியில் தோன்றினாய்! நின்னில் தோன்றினோம் என்று பரம்பொருள் பேசுகிறது. இதிலும் ஒரு சிறப்புண்டு. சிவபிரான் உமையையும் உடன் சேர்த்துக்கொண்டு நம்மைப் பேணும் அம்மை என்றானே தவிர, 'என்னைப் பேணும் என்று கூறவில்லை. அதேபோல இங்கும் இராகவன் நின்னின் தோன்றினேன் என்று கூறாமல் தோன்றினோம் என்று உளப்பாட்டுத் தன்மைப் பன்மையில் கூறுகிறான். இவ்வாறு இராமனே கூறினான் எனில், அனுமனுடைய ஆற்றலுக்கும், பக்திக்கும், தன்னலம் இன்மைக்கும், புலனடக்கத்துக்கும் வேறு சான்று வேண்டுவதில்லை அல்லவா. . . பரதனையும் காக்கிறான் பிராட்டியை அழைத்துக் கொண்டு, புட்பக விமானத்தில் அயோத்தி திரும்பும் இராமன், வழியில் பரத்துவாச-முனிவன் வேண்ட, அவன் ஆசிரமத்தில் உணவு கொள்ளத் தங்கினான் என்றாலும், அவனுடைய மனத்தில் பரதன் நிலை நினைவில் உறுத்திக்கொண்டே இருந்தது போலும்! எனவே உடன்வந்த அத்துணைப் பேரினும், தன் எண்ண்த்தை முடிக்க வல்லவன் அனுமன் ஒருவனே என்பதை அறிந்த இராகவன், அனுமனை அழைத்து, . -