பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 + கம்பன் - புதிய பார்வை இன்று நாம் பதிவருதுமுன், மாருதி ஈண்டச் சென்று, தீது இன்மை செப்பி, அத்தீமையும் விலக்கி நின்ற காலையின் வருதும்............................ (மீட்சிப் படலம்-200) இன்று புறப்பட்டு நாம் அயோத்தி வருமுன்னர், விரைவாக முன்சென்று, நம் நலம் கூறி, அங்கு நடைபெற இருக்கும் தீமையையும் விலக்கி, நீ இருக்கும் போது நாம் வருவோம்.) என்று கூறி அனுப்புகிறான். அனுமனை நன்கறிந்திருந்தது போலவே, பரதனை நன்கறிந்திருந்தவன் இராமன் ஒருவனே. எனவேதான் பரதன் ஏதாவது ஒரு கொடிய (தீக்குளித்தல்) செயலைச் செய்வான் என்பதை முன்கூட்டியே சிந்தித்து, அனுமனை விரைவில் சென்று அத்தீமையும் விலக்கு என ஆணை இடுகின்றான். அவ்வாறே விரைந்து அயோத்தி அடைந்த மாருதி, பரதன் தீப்புகா வண்ணம் அவனைக் காத்தான். அடுத்து இராகவன் வந்து முடிகவிக்கும் விழா மங்கலத்தில் அரியணையை அனுமன் தாங்கினான். அரியணை என்பது யாது? அரியணை என்பது அதிகாரத்தின் இருப்பிடம், அரசன் தன் எல்லையில்லாத அதிகாரத்தையும், ஆற்றலையும் பெறுவது அரியணையிலிருந்து முடிகவித்த பிறகுதானே ஏற்படுகிறது. எனவே அரியணை என்பது, அரச அதிகாரத்தின் அடையாளம். அதனை அனுமன் தாங்கினான்' என்றால், அந்த அரச அதிகாரத்தின் அடித்தளம் என்ன என்பதைக் கம்பன் கூறுகிறான். அனுமன் என்பவன் புலனடக்கம், தன்னலத் தியாகம், தொண்டுள்ளம் என்பவற்றின் மொத்த வடிவம் அல்லவா? இனி நடைபெறப் போகும் இராமராஜ்யத்தில் அதிகாரத்தின் அடித்தளம்,