பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 17 என்பது இவர்களுடைய நம்பிக்கை. இது சரியன்று, முதலாழ்வார்கள் தோன்றும் 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் 8 நூற்றாண்டுகள் முற்பட்ட சங்கப் பாடல்களிலும், 5 நூற்றாண்டுகள் முற்பட்ட மணிமேகலை யிலும் இராமன் திருமாலின் அவதாரம் என்று பேசப்படு கிறது. இக்கருத்து இத்தமிழ் நாட்டில் புதிதாக நுழைந்ததன்று. ஏன் மொழிபெயர்க்கவில்லை? இரண்டாவது, கம்பன் எந்த அளவிற்கு வான்மீகியிடம் கடன்பட்டான் என்பதை ஆராய வேண்டும். கம்பன் வான்மீகத்தை நேரிடையாகத் தமிழாக்கம் செய்யவில்லை என்பதை அனைவரும் அறிவர். இன்னும் கூற வேண்டு மானால் இராமாயணம், பாகவதம், மகாபாரதம் முதலிய தமிழ் நூல்கட்கு மூலம் வடமொழியிலேயே இருப்பினும், அவற்றைத் தமிழ் மொழியில் ஆக்கஞ் செய்தார்களே தவிர, யாரும் மொழிபெயர்க்க முன்வரவில்லை. இலக்கிய வளம் நிறைந்த தமிழ்மொழி போன்ற ஒரு மொழியில் வேற்றுமொழி இலக்கியத்தை மொழிபெயர்த்தால் அதனை யாரும் விரும்பிப் படிக்க முன்வாரார். இந்த உண்மையை நன்கு அறிந்துகொண்ட நம் முன்னோர் வடமொழிக் கதைகளையும் கதைப் பகுதிகளையும் வாங்கிக் கொண்டதுடன் அமைந்துவிட்டனர். தமிழாக்கம் செய்யப் பெற்றதாயினும் அவை தமிழில் மூலநூல் போன்ற சிறப்பைப் பெற்றன. இந் நாட்டுக்கும், இம் மொழிக்கும், இந் நாகரிகத்திற்கும், இப் பண்பாட் டிற்கும் ஏற்றமுறையில் மூலக்கதைக்கு வேண்டுமான வேறுபாடுகளை அமைத்து, ஏலாதனவற்றை நீக்கிப் புதிய படைப்பாகவே படைத்தனர். இவ்வாறு ஆக்கம் பெற்ற நூல்களைப் பற்றிக் கூறவந்த முதல் தமிழ்த் திறனாய்வாளராகிய வ.வே.சு. ஐயரவர்கள் தம்முடைய கம்பன் என்ற ஆங்கில நூலில், "தமிழில்