பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

341 + ஞானசம்பந்தன் هنة . وتقي தன்னலம், ஏதேச்சாதிகாரம் என்பவையாக இராமல், அடக்கம், பரநலம், தொண்டுள்ளம் என்பவையாகவே இருக்கும். அன்றியும் அனுமன் என்றுமே பிறர் அறியும் முறையில், விளம்பரம் ஆகும் முறையில் எதனையும் செய்ததில்லை. எனவே, இப்பொழுதும் அரியணையைத் தாங்கும் பணியை அவன் மேற்கொண்டான். தாங்க என்ற சொல்லைச் சொல்லும்பொழுதே தாங்குபவன் மிக மிகப் பெரிய வன்மை படைத்தவனாக இருத்தல் வேண்டும்; அதன் மீது சாய்கின்ற பொருளும் கனமுடையதாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறதல்லவா? அரச பாரம் என்ற ஒரு வழக்கும் உண்டு. இது பாரம் என்றும், அறிவுடையோர் இதனை விரும்பமாட்டார்கள் என்றும், இராமனே கூறுகிறானல்லவா? பரதன் வந்து அயோத்தி மீளவேண்டும் என்று தமையனை வேண்டும்பொழுது, இராமன் கூறிய . விடையல்லவா அது. . ... " ; : . வேண்டும் திறத்தாரும் வேண்டா அரசாட்சி - பூண்டு, இவ் உலகுக்கு இடர் கொடுத்த புல்லனேன். - (திருவடி சூட்டுப் படலம்-64) எனவே, வேறுவழி இல்லாமல் இராகவன் இப் பொழுது இந்த அரச பாரத்தைத் தாங்கப் போகிறான் என்றால், அதன் அடியில் இருப்பது அனுமன், அதாவது தொண்டு, தன்னலத் துறவு, புலனடக்கம் முதலியன. இதனால் இராம ராஜ்யம் பிற ஆட்சிகள் போல் இராமல், 'மக்களுக்காகவே மன்னன் என்ற முறையில் நடைபெறும் என்பதையும் குறிப்பாகக் கூறுகிறான் கவிஞன். எற்று என்று இரங்கும் செயல் எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல், மற்று அன்ன செய்யாமை நன்று. . . . . (திருக்குறள்-35)