பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 + கம்பன் - புதிய பார்வை இராமன் வாழ்க்கையில் ஏன் இதனைச் செய்தோம்? என்று, பின் இரக்கம் கொள்ளக்கூடிய செயல் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை-ஒன்று தவிர. அந்த ஒரு செயல் சுக்ரீவனிடம் தோன்றிய கழிவிரக்கத்தால் வாலியைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ளாமல், மறைந்து நின்று கொன்ற செயலாகும். இறக்கும்பொழுது, வாலியின் மனமாற்றத்தைக் கண்ட இராகவன், தான் செய்தது சரியா என்று ஐயங்கொள்ளத் தொடங்கிவிட் டான். மேற்கொண்டு ஒன்றுஞ் செய்யமுடியாத நிலையில், வாலியின் மகனாகிய அங்கதனிடம் உடைவாளை நீட்டி, நீ இது பொறுத்தி என்று கூறித் தந்தான். எனவே மனிதனாகப் பிறந்த பரம்பொருள் மனித நிலையில் இயல்பாக ஏற்படக்கூடிய சிறிய தவறுக்குத் தானும் ஆளாகிவிட்டான். அச்செயலில் கழிவிரக்கம் கொண்ட தால்தான், அவன் மகனிடம், நீ இச்செயலைப் பொறுத்துக் கொள்க' என்ற கருத்தில், நீ இது பொறுத்தி என்று வாயினால் கூறி, அச்செயலுக்கு அடையாளமான வாளையும் அவன் கையில் தந்துவிட்டான். அதாவது, இனி இத்தகைய தவறு நடைபெறாது என்பதற்கு அடையாள மாக, அரியணை ஏறும்போது அங்கதனே உடைவாள் தாங்கினான். ஒர் அரசனுக்கு அடையாளமான சிலவற்றுள் உடைவாளும் ஒன்றல்லவா? - தவறு நடைபெறாமையை அறிவிக்க நத்தியம் பதியின் தலை, நாள்தொறும் சந்தி இன்றி நிரந்தரம், தம்முனர் பந்தி அம்கழல் பாதம் அருச்சியா இந்தியங்களை வென்று இருந்தான் அரோ. (மீட்சிப் படலம்-203) அரியணை, பரநலம், தொண்டுள்ளம் என்பவற்றால் தாங்கப்படுதல் போல, உடைவாள் தவறிழைக்காமையை