பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 343 அறிவுறுத்தும் அடையாளமாக அமைந்துவிட்டது. இனிப் பரதன் வெண்குடை கவிப்பது சாலச் சிறப்புடையதே. கீழே அரியணை, மேலே வெண்குடை பரதனின் சிறப்பு யாது: - அனுமனைப் போலவே பரதனும் இந்திரியங்களை வென்றிருந்தான் என்றால், புலனடக்கத்தின் உச்சியில் நின்றான் என்பதே பொருள். புலனடக்கத்தால் வந்த உறுதிப்பாடு பரதனைத் தவம் செய்பவனாக ஆக்கி விட்டது. இத்தவ வாழ்க்கை அவனை வேண்டாமை என்ற விழுச்செல்வம் உடையவனாக ஆக்கிவிட்டது. இந்த வேண்டாமை என்பதே அவனை யாவரினும் உயர்ந்த வனாகவும் ஆக்கிவிட்டது. வேண்டாமைச் செல்வம் உடையானை அதிகாரமோ, ஆற்றலோ, வீரமோ எதுவும் ஒன்றுஞ் செய்ய முடியாது. - - மீட்டுவந்த நிலையில், பரதனை இலக்குவன் வீழ்ந்து வணங்கினான் என்று கூறவந்த கவிஞன் சமத்காரமாக ஒர் உண்மையை விளக்க வருகிறான். வீரம் மிக்கவனாகிய இலக்குவன், இந்திரசித்தனை வென்றவன், ஒருவன் தாளில் வீழ்ந்தான். அந்த ஒருவன் யார்? அரசச் செல்வம் அனைத்தை யும் தோல் செருப்புக்கு ஈந்தவன் என்று பேசுகிறான். கனைகழல் அமரர் கோமான் கட்டவன்-படுத்த காளை, துணைபரி, கரி, தேர் ஊர்தி என்று இவை பிறவும், தோலின் வினை உறு செருப்புக்கு ஈந்தான் வினைமலர்த் தாளின் வீழ்ந்தான். - (மீட்சிப் படலம்-329) (வீரக்கழல் அணிந்த, தேவராசனாகிய இந்திரனை வென்ற, இந்திரசித்தனை வென்றவனாகிய இலக்குவன்