பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಅ, ಆ, ஞானசம்பந்தன் + 345 கம்பநாடன் காப்பியம், இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரு கதையை எல்லோரும் பாடுவதுபோலத் தமிழில் பாடப்பட்டது என்று நினைத்துவிடக் கூடாது. இத்தமிழ் நாட்டின் அன்றைய நிலையைக் கண்டு, அதனைச் சீர்திருத்தும் எண்ணத்துடன் ஆக்கப் பெற்றது என்பதை அறிதல் வேண்டும். நீதிநூல் தந்த வள்ளுவன் கூறிய சட்ட திட்டங்கட்கு விளக்கம் கொடுக்கும் முறையில் காப்பியத்தை அமைக்கும் பொழுது, அதன் உயிர் நாடியாகப் புலனடக்கம் என்ற கொள்கையை அற்புதமாக அதனுள் அமைத்துப் பாடியுள்ளான் என்பதை அறிய வேண்டும். மாருதிக்குப் பரிசில் தருகிறான். இக்கட்டுரையின் தலைவனாகிய அனுமனை, இறுதியாகச் சந்திக்க வேண்டிய இடம், இராமன் விடை கொடுக்கும் பொழுது நிகழ்ந்தவை பற்றியதாகும். ஈதலோ எளிது; வரிசை அறிதலோ, பெரிது’ என்பது புறப்பாடல். எனவே அவரவர் தகுதியும் நிலையும் தெரிந்து பரிசுகள் வழங்கி விடை கொடுக்கிறான் இராகவன். அனுமனுடைய முறை வருகிறது. இராமன் என்ன செய்யப் போகிறான் என்று நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம். அங்கு வந்துள்ள அனைவரும் வரிசை அறிந்து அனுப்பப்பட வேண்டியவர்கள். அனுமனை எந்த வரிசையில் சேர்ப்பது? பிராட்டிக்கும், இளையவற்கும் உயிரை நல்கினவன், இராகவனே, நின்னின் தோன்றினோம் என்று நன்றிப் பெருக்கோடு கூறியுள்ளான். இத்தகைய ஒருவனுக்கு எவ்வாறு விடை கொடுத்தனுப்ப முடியும்? கம்பன் ஒருவன்தான் தனக்கே உரிய முறையில், இதற்கு முடிவு காண முடியும். - கம்பன் மட்டுந்தான் இதைச் செய்ய முடியும் ஐயன் மகிழ்ந்து, மாருதியை இனிதாக அருளுடன் நோக்கி, உன்னை அல்லால் யார் இத்தகைய உதவியைச்