பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 கம்பன் - புதிய பார்வை செய்ய முடியும்? அன்று நீ செய்த பேருதவிக்கு யான் செய்யக்கூடிய கைம்மாறு வேறு ஒன்றும் இல்லை. போரிலும் உதவிய வலிய தோளை உடையாய்! பொருந்தி, இடைவெளி இல்லாமல் நீ என்னைக் கட்டித் தழுவிக் கொள் என்ற பொருளில், மாருதி-தன்னை ஐயன் மகிழ்ந்து, இனிது - அருளின் நோக்கி, 'ஆர் உதவிடுவதற்கு ஒத்தார், நீ அலால் அன்று செய்த பேர் உதவிக்கு யான்செய் செயல் பிறிது இல்லை, பைம்பூண் போர் உதவிய திண்தோளாய்! பொருந்துறப் புல்லுக.................... * .. (விடை கொடுத்த படலம்-20 என்று கூறுகிறான் பரம்பொருள். ஆம்! அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கிறவர்கட்கு அவ்வவற்றைத் தருவதே அவன் தொழில். வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் (திருமுறை 6-23-1) என்பது அப்பர் பெருமான் தேவாரம். ஆனால் அனுமன் போன்ற சிலர் எதுவும் வேண்டா என்று கூறுவார்கள். இவர்கட்கு எதை வழங்குவது? அன்றியும் உயிரையே தந்த ஒருவனுக்கு, ஏன்? இரகு குலம் முழுவதும் உயிர்வாழ வழிசெய்த ஒருவனுக்கு யானையையும், குதிரையையும், பொன்னையும், பொருளையும் தந்தான் என்று கூறுவது, அவனை அவமதிப்பதாகும். அனுமனுக்கு இத்தகைய அவமா னத்தை இழைப்பானா காகுத்தன்? எனவே அனுமனுக்கு மட்டும், பிறர் யாருக்கும் தராத பரிசு ஒன்றைத் தருகிறான் இராகவன். பரம்பொருளின் திருவடியை அடைய வேண்டும் என்றுதான் உயிர்கள் விரும்புகின்றன. அந்தத் திருவடிப் பேறுகூட வேண்டா; அவனை ஓயாது பார்த்துக் கொண்டு, அவன் புகழைப் பாடிக்கொண்டு இருப்பதே