பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 347 வாழ்வின் குறிக்கோள் என்று கருதும் சிலரும் உண்டு. இத்தகையவர்களைப் பற்றிச் சேக்கிழார், ஈர அன்பினர் யாதும் குறைவிலார் என்றும், கூடும் அன்பினில் கும்பிடவே அன்றி, விடும் வேண்டா விறலின் விளங்கினார். (திருக்கூட்டச் சிறப்பு-9, 8) என்றும் பாடுகிறார். அவன் தன்னையே தருதல் ஆம்! அனுமனும் அத்தகையவன்தான்! அவன் வீடுபேற்றைக்கூட விரும்பவில்லை. இராம பக்தி சாம்ராஜ்யத்தில் இராமனை விடச் சிறந்ததாகிய, இராமநாமத்தை ஜபித்துக்கொண்டு வாழ்வதே குறிக்கோள் என்று கருதுபவன் அவன்! அவன் எதையும் விரும்ப வில்லை என்பது உண்மைதான். ஆனால் அவன் தலைவனாகிய இராகவன் ஒன்றை விரும்புகிறான்; அதுவே, தன்னை அவனுக்குத் தர வேண்டும் என்று நினைக்கின்ற நினைவு, எல்லோரும் அவனுடைய படைப்புத்தான் என்றாலும், ஒரு சிலருக்கு அவன் தன்னையே தர விரும்புகிறான். அப்படித் தருவதால் முடிவில்லாத ஆனந்தம் கிடைக்கிறதாம். யார் இவ்வாறு கூறுகிறார்கள்: நூல்களைக் கற்றுவிட்டுப் பேசுகிறவர்கள் கூறும் கூற்றா இது? இல்லை. இவ் அனுபவத்தை நேரே பெற்று அனுபவித்த ஒருவர் பேசுகிறார். தந்தது உன்தன்னை; கொண்டது என்தன்னை: சங்கரா! யார் கொலோ சதுரர்? அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்றது ஒன்று என்பால்? - (திருவாசகம்-கோயில் பதிகம்-10)