பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 + கம்பன் - புதிய பார்வை என்று பாடுகிறார் மணிவாசகப் பெருந்தகை! எனவே அனுமனுக்கு அந்தம் ஒன்று இல்லாத ஆனந்தத்தைத் தர வேண்டும் என்று நினைக்கிறான் பெருமான். எவ்வாறு தருவது? தன்னையே அவனுக்குத் தருவதன் மூலம் இதனைச் செய்கிறான்: - மேலும் தழுவிக் கொள்வதிலும் ஒரு நியதி உண்டு; தழுவுகின்றவன் உயர்ந்தவன் என்றும், தழுவப் பெற்றவன் ஒருபடி இறக்கம் என்றும் கூறும் மரபு உண்டு. இராமன் அனுமனைத் தழுவினால் இராமன் ஒருபடி உயர்ந்த வனாகவும், அனுமன் ஒருபடி இறக்கமாகவும் கொள்ள இடம் உண்டு. ஆனால் இப்பொழுது இராகவன் அதனை ஒழிக்க விரும்பி, அனுமனை நோக்கி, ஐயா! பொருந்துறப் புல்லுக (நீ என்னை வந்து, தழுவிக் கொள்வாயாக) என்று பேசுகிறான்! எனவே இராமன் பிறருக்குத் தந்த பரிசுகள் அனைத்துக்கும் ஒரு விலை உண்டு; மதிப்பு உண்டு. ஆனால் அனுமனுக்குக் கொடுத்த பரிசு விலைமதிப்பு அற்றது. ஆம்! பரம்பொருளுக்கு என்ன விலை? பரம் பொருள் தன்னையே தந்துவிடும்போது, அதற்கு எவ்வாறு விலை இடுவது? புலனடக்கமும், தொண்டுள்ளமும் இருந்துவிட்டால், ஒருவன் பரம்பொருளை நாடிச் செல்ல வேண்டிய தேவை இல்லை. அதற்குப் பதிலாகப் பரம் பொருள் அவனைத் தேடிக்கொண்டு வருகிறது. பரிசிலும் தருகிறது. எத்தகைய பரிசில்? - - ஒரு நீயாகத் தோன்ற விழுமிய பெறல் அரும் பரிசில் நல்குமதி . என்று திருமுருகாற்றுப்படை இப்பரிசிலுக்கு விளக்கம் தருகிறது. இராம காதையில் அனைவரும், முனிவர்கள் உள்பட இராகவன் அருளுக்கு ஏங்கி நின்றனர். ஆனால் இராகவன் அனுமனுடைய அன்புக்கு ஏங்கி நின்றான். அனுமனுடைய அந்தத் துய அன்பில் அப்படியே மூழ்கிப்