பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 349 போனான். அப்படி மூழ்குவதைத்தான் 'நீ என்னை வந்து பொருந்துறப் புல்லுக என்று கவிஞன் பேசுகிறான். இத்துணைச் சிறந்த முறையில், முன்பின் இலக் கியங்களில் எங்கும் காணாத முறையில், இராகவன், ‘என்னை வந்து நீ தழுவிக்கொள் என்று அனுமனைப் பார்த்துக் கூறியதாகப் பாடிவிட்ட பிறகு, அடுத்த பாடலில் யானை, குதிர்ை, ஆபரணம் முதலியவற்றைத் தந்தான் என்று கவிஞன் பாடுவானா? ஆனால், இன்றுள்ள பதிப்புகள் அனைத்திலும் அனுமனுக்கு அனைவரும் பரிசு தந்ததாக உள்ள பாடல்கள் உள்ளன. பொருந்துறப் புல்லுக என்ற பிறகு, பரிசு தந்தான் என்றும், அதை அனுமன் பெற்றுக்கொண்டான் என்றும், எப்படிக் கம்பன் பாடுவான் ? பட்டாபிஷேகத்தில் பரிசுகள் வசூல் பண்ணும் காலட்சேப காலத்து இடையே புகுந்த பாடல்கள் போலும் இவை!