பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 + கம்பன் - புதிய பார்வை மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் அனைத்திலும் இந்த இயல்பைக் காண்கிறோம்" என்று கூறுகிறார். "இந்தக் கொள்கையைத் தெலுங்கு மொழியிலும் காண்கிறோம். தமிழ் மொழியைப் பார்த்துத்தான் இவ்வாறு வடமொழி மூலக்கதையை தம் மொழியில் ஆக்கம் செய்ய ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறச் சான்று ஏதும் இல்லை. தெலுங்கில் பாரதம் பாடிய நன்னையா. திக்கண்ணா இருவரும் வடமொழிக் கதையை மட்டுமே ஏற்றனர். பாஸ்கரரின் இராமாயணமும், துளசிதாசரின் இராம சரிதமனஸ் என்ற நூலும் இவ்வகையிலேயே அமைந்தன. மூலக் கதையில் வேண்டுமான விகற்பங் கூறுவதுடன் கற்பனை, இயற்கை வருணனை, அணிகள் என்பவற்றைத் தம் மொழிக்கு ஏற்பவே செய்தனர். சில நிகழ்ச்சிகளை நீட்டியும், சிலவற்றைக் குறைத்தும் புதியனவற்றை உட்புகுத்தியும், புதிய கிளைக் கதைகளைப் புகுத்தியும் தம் விருப்பத்திற்கேற்பச் செய்துள்ளனர். இம்முறை தமிழகம், ஆந்திரம் என்பவற்றோடு நில்லாமல், குஜராத், வங்காளம் என்ற நாட்டின் பிற பகுதிகளிலும் இருக்கின்றது. முதல் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இந்நிலை நீடித்து 61(5$sörpgil” (V. V. S. Iyer’s Kamban, page-2) - இடைச் செருகல்கள் வான்மீகக் கதையை மிகப் பெருமளவு கம்பன் பின்பற்றி இருக்கின்றான் என்று கூறுவதில் தடை இல்லை. ஆனாலும் வருணனை, நிகழ்ச்சி, அமைப்பு, பாத்திரப் படைப்பு என்பவற்றில் பெரிதும் மாறுபாடு செய்துள்ளான் என்பதை இவ்விரு நூல்களைக் கற்றுத் துறைபோகிய வ.வே.சு. ஐயர் போல்வார் கண்டு கூறியுள்ளனர். வான்மீகத்தில் இடைச் செருகல் பாதிக்கு மேல் உள்ளன என்று இற்றைநாள் ஆராய்ச்சியாளர் ஆய்ந்து தெளிந் துள்ளனர். பாலகாண்டம், உத்தரகாண்டம் என்பவை இடையே செருகப்பட்டதுடன், நூலுள்ளும் பல பாடல்கள்