பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 351 என்றும் கூறிச் செல்கிறது. வளர்ச்சி அடைந்துள்ள எல்லா மொழிகட்கும் இது பொருந்தும். இவ்வாறு கூறுவதால் ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்களும் எவ்வித வேறுபாடும் இல்லாமல், தம்முள் பொருளைக் குறிக்கும் ஆற்றலைச் சுயமாகப் பெற்றுள்ளன என்பது குறிப்பாம். இரண்டு சொற்கள் ஒரே பொருளைக் குறித்தாலும், அவற்றுள் ஒசை முதலிய வேறுபாட்டால் ஒரளவு நுண்மையான வேறுபாடு உண்டு. இதனால்தான் கவிதை சிறக்கின்றது. கவிஞன் கூறவந்த ஒன்றைக் குறிப்பதற்கு, ஒன்றுக்கு மேம்பட்ட பல சொற்கள் இருப்பினும், அவற்றுள் சிறந்த ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துபவனே, சிறந்த கவிஞன். சிறந்த ஒரு சொல்லைத் தேர்ந்துகொள்வது அவனுடைய கல்வி, அறிவு, கேள்வி, அனுபவத்தின் அடிப்படையிலேயே நடைபெறும். உயிரோட்டமுள்ளது சொல் இதனால்தான், ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு ஆக்கஞ் செய்வது கடினமாக ஆகிவிடுகிறது. மூலத்தில் உள்ள ஒரு சொல் பன்னூறு ஆண்டுகளாக அம்மொழியில் உள்ள பல அறிஞர்களாலும், கவிஞர் களாலும் பயன்படுத்தப் பெற்று, மெருகு ஏற்றப் பெற்றுள்ளது. இக்கருத்தை விளக்க வந்த அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியும், தலைசிறந்த திறனாய்வாளரும் ஆகிய ஆலிவர் வென்டால் ஹோம்ஸ் என்பார், ஒரு சொல் என்பது வைரம் போன்று ஒரே மாதிரியாக என்றும் ஒளி

  • A word is not a crystal transparent and unchanged. It is - the skin of a living thought and may vary greatly in colour and content according to the circumstances and the time in which it is used. . . - . . . . . .

—Justice O. W. Holmes, TOWNE vs EISNER.