பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 + கம்பன் - புதிய பார்வை விட்டுக் கொண்டிருக்கும் என்பது சரியன்று: எண்ணங்கள் என்பவற்றின் மேல் போர்த்தப்பட்டுள்ள உயிரோட்ட முள்ள தோல் போன்றது சொல். அது தோன்றும் நேரம், இடம் என்பவற்றிற்கேற்ப அதன் பொருளும், இயல்பும் மாறுபடும் என்று கூறுவது சாலப் பொருத்தம் உடையதாகும். ஆங்கிலத்தில் உள்ள பல சொற்களைத் தமிழில் பெயர்ப்பது இயலாத காரியம். அதேபோலத் தமிழில் உள்ள பல சொற்களை ஆங்கிலம், வடமொழி முதலிய பிற மொழிகளில் பெயர்ப்பதும் இயலாத காரியம், அறம் என்ற தமிழ்ச் சொல்லை தர்மம் என்று கூறுவது பொருந்தாது. - ஒரளவு பொருத்தமுடையது ஆங்கிலத்தில் வேல்யூஸ்" என்ற ஒரு சொல் உண்டு. இதற்கு விளக்கம் தரவந்த ஆக்ஸ்பர்ட் அகராதி, எவற்றை வேறு பயன் கருதாமல் அவற்றுக்காகவே உயிரினும் சிறந்ததாக மதிக்கிறோமோ, அவையே வேல்யூஸ் என்ற சொல்லின் பொருளாகும்.” என்று கூறுகிறது. எனவே, இச்சொல்லை நேரிடையாக மொழி பெயர்க்க முடியா விடினும், இதனுடன் ஒரளவு பொருத்தம் உடைய தமிழ்ச் சொல்லைத் தேடினால் விழுப்பொருள்கள்' என்பது ஒரளவு பொருந்துவதாக உள்ளது. குறிப்பே சொல்லின் உயிர்நாடி ஒருவன் ஒரு சொல்லைப் பயன்படுத்தும்பொழுது, அச்சொல் ஆயிரம் ஆண்டுகளாக அவன் முன்னோர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் என்பவர்களால், பயன்படுத்தப் பட்டிருத்தலின், அத்துணை நுண்மையான பொருள் வேறு 1. Values 2. That which is esteemed for its own sake. -