பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் + 353 பாடுகளுடன் கேட்போன் செவியில் துழைகின்றது. கேட்பவனுடைய தகுதி, கல்வி, கேள்வி, அனுபவம் என்பவற்றிற்கு ஏற்ப, அவன் மனத்தில் அச்சொல் பொருளை ஆழத்துடன் விளக்குகிறது; இத்தனை பொருள் களையும் நேரிடையாக அச்சொல் விளக்குவது இல்லை. குறிப்பால் உணர்த்தும் இயல்பு சொல்லுக்கு உண்டு. விழுப்பொருள்கள் இருவகை இம்முறையில் விழுப்பொருள்கள் என்று கூறும் பொழுது, வேறு ஒரு பயனையும் கருதாமல், எவ்வெவற்றைத் தம் உயிரினும் சிறந்தவை என்று இத்தமிழர் கருதினார்களோ, அவற்றையே ஈண்டு, குறிக்கிறோம். இந்த விழுப்பொருள்கள் தனிமனிதனுக்கு உரியவை; சமுதாயத்துக்கு உரியவை என இருவகைப்படும். இவ்வாறு கூறுவதாலும், விழுப்பொருள்கள் என்று பெயர் கூறுவதாலும், இவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறாமல் இருப்பவை என்று யாரும் கருதிட வேண்டா. இவ்விழுப்பொருள்களுள் மாறும் விழுப்பொருள்கள்' “மாறா விழுப்பொருள்கள்” என இருவகை உண்டு. தனி மனிதன் போற்றும் விழுப்பொருள்கள் என்று கூறும் பொழுது, அவனை ஒத்த தனி மனிதர்கள் அனைவரும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது சரியன்று. ஒரு சமுதாயம் ஒரு காலகட்டத்தில், விழுப்பொருள்கள் என்று ஏற்றுக்கொண்ட ஒன்றை, அதே சமுதாயம் பிறிது ஒரு காலகட்டத்தில், அதையே விழுப்பொருள்கள் என்று ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. இவை அனைத்தும் மாறும் விழுப்பொருள்கள் எனப்படும். 1. Suggestion.2. Changing Values 3. Non-changing or Permanent Values.