பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 கம்பன் - புதிய பார்வை மாறா விழுப்பொருள்கள் இதன் எதிராகச் சிலவற்றை மாறா விழுப்பொருள்கள் என்று தனி மனிதர்களும், சமுதாயமும், ஏற்றுக்கொள்வ துண்டு. பிறருக்குத் தீங்கு நினைக்கவோ, செய்யவோ கூடாது. தன்னலத்தைத் துறந்தேனும், பிறருக்கு நலஞ் செய்ய வேண்டும் என்பவை போன்ற விழுப்பொருள்கள் மாறா இயல்புடையவை என்று கருதப் பெறுபவை. ஏறத்தாழ எல்லாச் சமுதாயங்களும் இப்பொதுவான விழுப்பொருள்களைப் போற்றும் இயல்புடையன. இவற்றைப் போற்றும் சமுதாயத்தை, நாகரிகம் முதிர்ந்த சமுதாயம் எனக் கூறுகிறோம். கம்பன் காணும், மாறும் விழுப்பொருள் பல தார மணம் என்பதை, ஒருகாலத்தில் எல்லாச் சமுதாயங்களும் ஏற்றுக் கொண்டிருந்தன என்பதை அறிகின்றோம். ஆனால் கம்பன் இதை ஏற்பதாகத் தெரியவில்லை. பெண்கட்குக் கற்பு கற்பிப்பது போல் ஆண்கட்கும் கற்புடைமை வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டைக் கம்பன் விரும்பினான் என்று தெரிகிறது. அவன் வாழ்ந்த ஒன்பதாம் நூற்றாண்டில்கூடப் பலதார மணம் தவறுடையது என்று சமுதாயம் கருதினதாகத் தெரியவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதைத் தனிமனிதனுக்குரிய விழுப்பொருளாகக் கருதிய கம்பநாடன், இதனைக் குறிப்பாகவும், வெளிப் படையாகவும் தெரிவிக்கின்றான். உலக இலக்கிய கர்த்தாக்கள் அனைவரினும் மேம்பட்டு நிற்பவனாகிய கம்ப நாடன், தனிமனிதனுக் குரிய பல்வேறு விழுப்பொருள்கள், சமுதாயத்துக்குரிய விழுப்பொருள்கள் ஆகிய பலவற்றையும் எடுத்துக்காட்டிச் செல்கிறான். தனிமனிதனுக்குரிய விழுப்பொருள்களிலும்,