பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 355 பல வேறுபாடுகள் உண்டு. தசரதன் பிள்ளைகளாகிய இராம இலக்குவர்கள் என்று எடுத்துக்கொண்டால் கூட இருவருடைய விழுப்பொருள்களும் வேறு வேறு. விழுப்பொருள்கள் வேறாக இருத்தலின் ஒருவருக்கொருவர் காட்ட வேண்டிய அன்பில் குறை இருக்க வேண்டிய இன்றியமையாமை இல்லை. ஒரே மனிதனுடைய சூழ்நிலையும், அடிப்படையும், மாறும்போது பழைய விழுப்பொருள்களை உதறிவிட்டுப் புதியனவற்றை ஏற்றுக்கொள்கிறான். ஜனகனிடம் இராம இலக்குவர்களை அழைத்துச் செல்கிறான் விசுவாமித்திரன், பெண்ணைப் பெற்றவர் கட்கு இளைஞர்கள் யாரைக் கண்டாலும் தம் மகளுக்கு ஏற்ற மணாளனாக இவன் அமைவானா? என்ற எண்ணம் உண்டாவது இயற்கைதானே! எனவேதான் விசுவாமித் திரன் நின் வேள்வி காணிய வந்தார்; வில்லும் காண்பார்’ என்று கூறுகிறான். இடையே இவர்கள் யார் என்று அறிமுகப்படுத்தும் முறையில் தசரதனுடைய பிள்ளைகள் இவர்கள் என்பதைத் தெரிவிக்கிறான் முனிவன். இதனைக் கேட்டவுடன் எதிர்கால மாமனாராகிய ஜனகன் மனத்தில் ஒர் ஐயம் தோன்றத்தானே செய்யும்? அறுபதினாயிரம் மனைவியரைத் தந்தை மணந்தான் எனில், அவன் பிள்ளை எப்படி இருப்பானோ? என்ற ஐயம், தோன்றுவது இயல்புதானே! அதற்கும் விடையளிக்கும் முறையில் முனிவன் பேசத் தொடங்குகிறான். பெற்ற கடமைதான் தசரதனுக்கே தவிர, உபநயன விதி முடித்து, வில்வித்தை முதலிய கலைகளைக் கற்றுத் தந்தவன் வசிட்டனே காண் என்று கூறி முடிக்கிறான். இராமன் ஒருதாரக் கொள் கையன் என்பதைப் பிறிதோர் இடத்தில் வெளிப்படக் கூறுகிறான். இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்' என்று இராகவன் பிராட்டி யிடம் கூறியதாகவும் கூறுகிறான். இது வெளிப்படையாகக்