பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 + கம்பன் - புதிய பார்வை கூறிய இடம். முதற் காப்பியத்தில் சொல்லப்பட்ட முறையை மாற்றிவிடுகிறான் கம்பநாடன். பல மனைவியர் இருப்பதில் தவறு இல்லை என்பதைப் பழைய காப்பிய காலம் விழுப்பொருளாகக் கொண்டிருந்தது. கம்பனின் இலக்கியக் காப்பியம், அந்த விழுப்பொருளை (Values) உதறிவிட்டுப் புதிய விழுப்பொருளை மேற்கொண்டு விட்டது. ஒரு தாரமே சிறந்தது என்பது புதிய விழுப் பொருள். தனிமனிதனுக்கு விழுப்பொருள் கூறும்பொழுதுகூடக் கவிஞன் அந்தத் தனி மனிதனுடைய கல்வி, ஒழுக்கம், பண்பாடு, குடிப்பிறப்பு என்பவற்றிற்கு ஏற்பவே விழுப்பொருளை அமைக்கிறான். காடு செல்ல முடிவு செய்த இராமன் தன் செல்வத்தைத் தானம் செய்கிறான். அதனைப் பெற்றுக் கொள்ள வந்தவர்களுள் கிழட்டு அந்தணன் ஒருவன் பசுக்களைத் தானமாகப் பெற வருகிறான். அவன், எவ்வளவு பசுக்கள் வேண்டும் என்று கேட்கப்பட்ட பொழுது, தனது கைத்தடியைச் சுழற்றி எறிந்து, அது எவ்வளவு தூரம் செல்லுமோ அந்த அளவு பசுக்கள் வேண்டும் என்று கூறிவிட்டு, அந்தக் கிழவன் மிக முயன்று கம்பை எறிகிறானாம். அவன் ஆசைக்கு அளவில்லை. உள்ளவை அனைத்தையும் வழங்க முற்படும் இராமனும், அளவிலா ஆசை கொண்ட கிழட்டு அந்தணனும் அயோத்தியிலேயே ஒரே காலத்தில் வசித்தவர்கள்தாம். ஆனால் இருவருடைய வாழ்க்கையிலும் எவ்வளவு மாறுபட்ட விழுப்பொருள்கள்! சோதரருள் மாறுபட்ட விழுப்பொருள் கிழட்டு அந்தணனும், இராகவனும் சமுதாயத்தின் இரு துருவங்கள் போன்று, இரண்டு முனைகளில் உள்ளவர்கள். அவர்களுக்குள் ஒர் ஒற்றுமையைக் காண்டது கடினம். ஆனால் ஒரே வீட்டில் அண்ணன் தம்பியாகப்