பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 357 பிறப்பவர்களுள்ளும் ஒத்த குலம், ஒத்த கல்வி, ஒரே தாய் தந்தையர் என்றாலும் என்ன? அவரவர் வாழ்க்கையில் எவ்வெவற்றை விழுப்பொருள் என்று கொண்டார்கள் என்று பார்த்தால், உண்மை விளங்கும். இராமனும், இலக்குவனும் அண்ணன் தம்பியர்தாம்! இவர்கள் இருவரும் கொண்டிருந்த விழுப்பொருள்கள் வெவ்வேறே அன்றோ! இராமனைப் பொறுத்தமட்டில் அறம் ஒன்றே அவனுக்கு விழுப்பொருள்! அறத்தின் அடிப்படையில் தாய், தந்தை, மனைவி ஆகிய அனைவரும் மதிக்கப்படும் உறவுகளே! ஆனால், இலக்குவனுக்கோ விழுப்பொருள் வேறு! இராமபக்தி என்ற ஒன்றுதான், அவன் கொண்ட விழுப்பொருள். அதன் எதிரே தாய், தந்தை, சோதரன் ஆகிய அனைவரும் ஒதுக்கப்பட வேண்டியவர்களே! இந்த இருவரும் கொண்ட தனித்தனியான விழுப்பொருள்களை நன்கு எடுத்துக்காட்டி, அவ்வவ் விழுப்பொருள்களுக்காக அவர்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக உள்ளனர் என்பதையும் கவிஞன் விரிவாகக் கூறுகிறான். விழுப்பொருளை மாற்றலாம் இனி, ஒருவன் தன் வாழ்நாளில் கொண்டிருக்கும் விழுப்பொருளை, ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட காரணத்திற்காக மாற்றிக் கொள்வதும் உண்டு. காரணம், அந்தக் குறிப்பிட்ட காரணம், தான் அதுவரை கொண்டிருந்த விழுப்பொருளைவிட உயர்வானது என்பதுதான். காந்திஜி அஹிம்சையை உயிரினும் மேலாக மதிப்பவர். பசுப் பாதுகாப்பைப் போற்றுபவர் என்றாலும், இங்கிலாந்தில் ஒருமுறை ஜின்னாவை உணவுக்கு அழைத்தார். விருந்தினராக வந்த ஜின்னாவுக்கு மகாத்மா என்ன உணவைத் தந்தார் தெரியுமா? தாம் உண்ணும் வேர்க்கடலையை அன்று. பசுமாட்டுக் கறியைத் தந்தார். இதன் உட்பொருளை அறியாத மக்கள் அவரைக் குறை