பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 + கம்பன் - புதிய பார்வை கூறினர். ஆம்! பல சமயங்களில் ஒருவர் கொண்டிருக்கிற விழுப்பொருளை மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், மாற்றிக் கொள்வதற்குத் தகுந்த காரணமும் இருக்க வேண்டும். எந்த இந்து தர்மம் பசுப் பாதுகாப்பைப் போற்றுகிறதோ, அதே இந்து தர்மம், அதிதியை (விருந்தினரை) உபசரிக்கும் பொழுது அவர்கள் விரும்புவதையே தரல் வேண்டும் என்று கூறுகிறது. எனவே அடிகளார் தம் அழைப்பை ஏற்று வந்துள்ள விருந்தினர் விரும்புவதையே தருவது தன் தலையாய கடமை என எண்ணினார். தம் விழுப்பொருளைத் தக்க காரணத்துக் காகவே மாற்றிக் கொண்டார். இந்த நுண்மையான கருத்தைக் கவிஞன், காப்பிய நாயகனும், அறத்தின் மூர்த்தியுமான, இராகவனிடமே வைத்துக் காட்டுகிறான். பெண்ணின் மேல் அம்பு தொடுத்தல் ஆகாது என்று, அதுவரை தான் கொண்டிருந்த விழுப்பொருளை, விசுவாமித்திரன் சொல் கேட்டு, இராகவன் உதறிவிடுகிறான். இதுபற்றி முன்னர் விரிவாகப் பேசப் பெற்றது. இராகவனை ஒத்த ஒருவன், தான் அதுவரை கொண்டிருந்த விழுப்பொருளை உதறவும் முடியாமல், ஏற்கவும் இயலாமல், தன்னுள்ளேயே போராடி, இறுதியில் அதற்கு முடிவு காண்பதாகவும் கவிஞன் கூறுகிறான். தன் மனமாற்றத்தைக் கூறத் தொடங்கிய இராகவன் மிகக் கவனத்துடன் பேசுகிறான். ஐயனே! அறம் அல்லா ததைச் செய்க என்று, நீயே ஏவினால், நின் சொற்களை வேதம் என்று கொண்டு செய்வதே எனக்கு அறமாகும்' என்ற பொருளில், ஐயன் அங்கு அதுகேட்டு, 'அறன் அல்லவும் எய்தினால், அது செய்க என்று ஏவினால்