பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 359 மெய்ய! நின் உரை வேதம் எனக்கொடு செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு'................ . (தாடகைவதைப் படலம்-45) என்று கவிஞன் இராமனைப் பேச வைக்கின்றான். இதுவரை இராமன் எதனை விழுப்பொருள் என்று கொண்டிருந்தானோ அதனை மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டான். பெண்ணைக் கொல்லுதல் தவறு என்பது எப்பொழுது தானே அந்த முடிவை மேற்கொண் டால் அது அவனுடைய விழுப்பொருளின்படி தவறுதான். ஆனால், இராமனுடைய பிற விழுப்பொருள்களில் தாய், தந்தை, குரு, தெய்வம் என்றவர்கள் ஏவியதை உடனடி யாகச் செய்ய வேண்டும் என்பது தலையாய விழுப் பொருளாம். இராமன் மேற்கொண்டிருந்த இவ்விரு விழுப்பொருள்களுள் முரண்பாடு ஏற்பட்டுவிட்டது இப்பொழுது! இவை இரண்டின் இடையே உள்ள தார தம்மியங்களை ஆராய்ந்த இராமன், இறுதியாக ஒன்றை எடுத்துக்கொண்டு ஒன்றை விட்டுவிடுகிறான். 'அறன் அல்லவும் எய்தினால், அது செய்க என நீ ஏவினால் என்று கூறும்பொழுது, இராமனுடைய மனப்போராட்டத்தை அறிய முடிகிறது. அறன் அல்லது எய்தாது என்பதை விளக்க எய்தினால் என்று, ஒரு ஆல் விகுதி தருகிறான். மேலும் அது செய்க என நீ ஏவினால் என்று கூறும்பொழுது, நீ ஏவமாட்டாய் என்ற பொருளும் அதில் தொக்கி நிற்கிறது. எது அறம் பெண்ணைக் கொல்லக்கூடாது என்பது பொதுவான அறம், அல்லது சட்டம். நீண்ட காலமாக எழுத்தில் உள்ள இந்தச் சட்டத்தின் மாறுபட்ட தீர்ப்பை இப்பொழுது ஒரு நீதிபதி வழங்குகின்றார். அவர் யார்? ஓர் உலகத்தையே தம் தவ வலிமையால் படைக்கும் பேராற்றலும் பேரறிவும் உடைய பெருமகன். எனவே எழுதப் பெற்ற சட்டத்தை விளக்கும் தகுதியும் ஆற்றலும் உடைய விசுவாமித்திரன் அந்தச்