பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 கம்பன் - புதிய பார்வை சட்டத்திற்குப் புதிய விளக்கம் தருகிறான். என்ன புதுமை? பெண் உடம்பை மட்டும் வைத்துக்கொண்டு, குருட்டுத் தனமாகப் பெண் என்று முடிவு செய்வது பெரும் தவறு. தன்மை இருந்தால் ஒழியப் புற உடம்பை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவரை ஆண் என்றோ பெண் என்றோ, முடிவு செய்துவிடக்கூடாது, என்பது விசுவாமித் திரன் தந்த புது விளக்கம், பெண் என்று இவளை நினைப்பது பேதைமையின் பாலதாகும் என்பது அவன் வாதம். இனி இத்தகைய ஒரு தீர்ப்பை மதிநுட்பம் நூலோடு உடைய விசுவாமித்திரன் தந்துவிட்ட பிறகு, இது பிறர் ஏற்கவேண்டிய தனிச் சிறப்பைப் பெற்றுவிடுகிறதல்லவா? எனவேதான் இராமன் நீ ஏவினால், நின் உரை வேதம் எனக் கொண்டு செய்கைதான் எனக்குச் சிறப்புடைய வழியாகும் என்று பேசுவது, அவன் தன்னுடைய விழுப்பொருளை மாற்றிக் கொண்டான் என்பதைக் காட்டுகிறது. தன்னலம் அல்லது அற்பப் பயன் கருதி அவன் தான் கொண்டிருந்த விழுப்பொருளை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே, இதுவும் உலகிடை உண்டு என்பதைக் காட்டக் கம்பன், இப்போராட்டத்தையும் இராமனின் இந்த முடிவையும், நமக்குக் காட்டுகிறான். இவ்வாறு கூறும்பொழுதுகட, தென்சொல் கடற்கு எல்லை தேர்ந்தவனாகிய இராமன், சொற்களை அளந்து போட்டுப் பேசுகிறான். இராமா இது செய்யலாமா? என்று விசுவாமித்திரன் கேட்டிருந்தால், ஒருவேளை இராமன் இது தவறு என்று எனக்குப் படுகிறது முனியுங்கவா!' என்று கூறி இருப்பான். அப்படி ஒரு நிலையை வைத்துக் கொள்ளாமல் அது செய்க என நீ ஏவினால் என்று கூறிவிட்டமையின், இந்தச் செயலால் விளையும் பாவ புண்ணியங்கட்கு நீயே பொறுப்பாளி ஆகிறாய் என்று இராமன் குறிப்பாகக் கூறிவிட்டான்.