பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 19 செருகப் பெற்றுள்ளன என்பர் ஆராய்ச்சியாளர். ஒரு நூல் ஒப்புயர்வற்ற சிறப்பை அடைந்து விட்டால் அதில் தம் சரக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்றும் உண்டு. ஈடு இணையற்ற பழமையும் சிறப்பும் வாய்ந்த காரணத்தால் அரசின் பாதுகாப்புப் பெற்ற கட்டடங்களில், இன்றும் அவற்றைக் காணச் செல்லும் சிலர் தம் பெயரைச் செதுக்கிவிட்டு வருதலைக் காண்கிறோம் அல்லவா ? இப் பெருமக்களுக்கு முன்னோடிகளான பலர் அவ்வக்காலத்துக்கு ஏற்பவும், தத்தம் பெருமை கருதியும் இடைஇடையே கவிதைகளைப் புனைந்து பெருநூல்களில் செதுக்கியுள்ளனர். கிறித்தவ வேதமாகிய விவிலிய நூலில் எவ்வளவு இடைச் செருகல்களும் மாற்றங்களும் புகுந்துள்ளன என்பதை, டால்ஸ்டாயின் பாவ மன்னிப்பும் என் நம்பிக்கையும்' (A confession and what I believe) groñrp Brodi, Lisräää காணலாம். எனவே எது மூலம் என்று காண வேண்டு மாயின் நீண்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். கம்பனைப் பொறுத்துங்கூட இதே நிலைதான் இருந்து வருகிறது. அவனுடைய இராமகாதையிலும் நூற்றுக்கணக் கான பாடல்கள் இடைச்செருகலாகப் புகுந்துள்ளன. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொரு பிராந்தியத்தில் காணப்படும் சில பாடல்கள் பிற பிராந்தியங்களில் உள்ள ஏடுகளில் இல்லை. ஒரே பாடலில்கூட சில சமயங்களில் இருபது பாடபேதங்கள் உள்ளன. இத்தனை இடையூறுகட் கிடையேதான் உண்மைக் கம்பனைக் காண வேண்டி யுள்ளது. கம்பனின் இராமாயணத்தைப் பாராதவர்கள் கூட கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற அடியைக் கம்பன் பாடியதாகக் கூறுவதுண்டு. மன்னனே! அவனியை மகனுக்கு ஈந்து என்று தொடங்கும் பாடலும் கம்பனுடையது என்று கருதியேற்றவர்கள் இன்றும் உண்டு. இத்துணை இடையூறுகளையும் தாண்டிச் சென்றால் கம்பனை உள்ளவாறு காண முடியும்.