பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 361 குருவாகவும், தெய்வமாகவும், உள்ள ஒருவன் ஏவியதைச் செய்வதுதான் ஒருவனுக்குத் தலையாய விழுப்பொருள் என்பதையும் இராமன் எடுத்துக் கூறிவிட்டான். தனிமனிதன் கொண்டுள்ள விழுப்பொருள்கூடத் தக்க காரணங்களால் மாற்றிக் கொள்ளப்படலாம், என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும். தம்பியின் மாறா இயல்பு இராமன் தன் விழுப்பொருளை மாற்றிக்கொண்டாலும், அவனுடைய நிழலாகவும் அணுக்கனாகவும், தொண்ட னாகவும் உள்ள இலக்குவன் தான் கொண்ட விழுப் பொருளை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. அயோமுகியைக் கொன்றுவிட்டாயா என்று இராமன் கேட்டதற்கு இலக்குவன் கூறும் இங்கிதம் நிறைந்த விடையைக் கண்டால் இவ்வுண்மை நன்கு விளங்கும். புன்தொழில் அனையவள், புகன்ற சீற்றத்தால் கொன்றிலை போலுமால் கூறுவாய்' என இராமன் கேட்டவுடன், ‘துளைபடு மூக்கொடு செவி துமித்து உக, வளை எயிறு இதழொடு அரிந்து, மாற்றிய அளவையில் பூசலிட்டு அரற்றினாள் என இளையவன் விளம்பி நின்று இரு கைகூப்பினான். (அயோமுகிப் படலம்-9) 'கொல்லவில்லை; பெண் கொலை கூடாதாகலின்’ என்று வாயினால் கூறாமல், அவள் அரற்றினாள் என்று கூறி வணங்கினான் அப்பெருமகன், இக்குறிப்பை அறிந்து கொண்டு சக்கரவர்த்தித் திருமகன், தொல்இருள், தனைக்கொலத் தொடர்கின் றாளையும் கொல்லலை! நாசியைக் கொய்து நீக்கினாய்! வல்லைநீ மனுமுதல் மரபினோய்!................. (அயோமுகிப் படலம்-92) என்கிறான்.