பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 கம்பன் - புதிய பார்வை விழுப்பொருளும், இலக்குவன் விழுப்பொருளும் முற்றிலும் மாறுபட்டு நிற்பனவேயாம். இராமனைப் பொறுத்த வரையில் அவனுக்குத் தாய், தந்தை, சோதரன் என்று பாகுபாடு உண்டு. முன்னர் உள்ள இருவரும் என்ன ஏவினாலும், ஏன் என்று கேளாமல், உடனே கீழ்ப்படிய வேண்டும் என்ற கொள்கையுடையவன். அவன் உயிரினும் மேலாக மதிக்கின்ற விழுப்பொருள் அவ்வாறு கீழ்ப் படிதலே என்ற கொள்கையுடையவன். அதனால்தான் கைகேயி அரசன் உன்னை வனஞ் செல்ல ஆணை யிட்டுள்ளான்' என்று கூறினவுடன், மறுவார்த்தை பேசாமல், "எந்தையே ஏவ நீரே உரை செய இயைவது உண்டேல், உயர்ந்தவன் அடியேன்” (கைகேயி சூழ்வினைப் படலம்-110) என்றும், "மன்னவன் பணி அன்றாகில் தும்பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?' (114) என்றும் கூறி "விடையுங் கொண்டேன்" என்று புறப்படுகிறான். இராமன் விழுப்பொருள் இவ்வாறு இருத்தலின், அவன் எதிர் பேசாது, உடன் புறப்படச் சித்தமானதில் புதுமை இல்லை. ஆனால், இளையபெருமாளைப் பொறுத்தமட்டில் நிலைமையே வேறு. அப்படியானால் அவனுக்குத் தாய், தந்தை என்று மதிப்பு இல்லையா? நன்றாக உண்டு. தாய் தந்தையரை உயிரினும் மேலாக மதிக்கின்றவன்தான் இலக்குவனும், அப்படியானால், ஏன் இராமன் தந்தையை வாகை கொண்டோ? ஈன்றாளை வென்றோ இக்கதம் (கோபம்) தீர்வது? என்று கேட்டபொழுது, ஏன் இலக்குவன் அதுபற்றிக் கவலைப்படவில்லை? என்ற வினா நியாயமானதே! இதில் ஒரே ஒரு சிறு வேறுபாடு தான் உண்டு. அதனைப் புரிந்துகொள்ளாவிடின் விளைவது தவறே ஆகும். இளையவனைப் பொறுத்த மட்டில் அவன் தாய், தந்தை, சோதரர்கள் யார் தெரியுமா?