பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 365 இதோ அவனே, இராமனிடம் பேசும்போது, இந்த உண்மையைக் கூறுகிறான். 'நல் தாதையும் நீ தனிநாயகன் நீ; வயிற்றில் பெற்றாயும் நீயே, பிறர் இல்லை; (நகர் நீங்கு படலம்-133) இப்பொழுது புரிகிறதல்லவா ? ஏன் இலக்குவன் தசரதனையும் கைகேயியையும் பரதனையும் மதிக்க வில்லை என்று? அவனைப் பொறுத்தமட்டில் சுமித்திரை அவனை ப் பெற்றவ ள் என்பதைக் கூட ஏற்க மறுத்துவிட்டான் ! 'வயிற்றில் பெற்றாயும் நீ! என்று ஆண்மகனாகிய இராமனைப் பார்த்துக் கூறியதுகூட வியப்பில்லை; அடுத்து ஒரு சொல்லைப் போட்டானே அதுதான் சிறப்பு. வயிற்றில் பெற்றாயும் நீயே; பிறர் இல்லை' என்ற சொற்கள், இலக்குவனுடைய அந்தரங் கத்தில் உள்ள விழுப்பொருள் யாது என்பதை நமக்குக் காட்டிவிடுகிறது. ஒரு தாய் ஏவினதை ஏற்றுக்கொண்ட இராமன், இலக்குவனைப் பொறுத்தமட்டில் இராமனுக்கு ஆபத்து என்றால் அவனுடைய தாய், தந்தை, தெய்வம் (தனி நாயகன்) ஆகிய அனைவருக்கும் ஒரு சேர ஆபத்து வந்துவிட்டதாக அல்லவா பொருள்! எனவே இராமன் கூறிய தசரதன், பரதன், கைகேயி என்பவர்கள் இராமனுக்குத் தந்தை, தம்பி, தாய் எனப்படுவார்களே தவிர, இலக்குவனைப் பொறுத்தமட்டில் இவர்கள் அனைவரும் அந்நியர்களே! அவன் தாய், தந்தை, தெய்வம் அனைவரும் இராமனே ஆதலின், அவன் தசரதனைப் போரிட்டுக் கொல்லத் துணிந்ததில் தவறு இல்லை யல்லவா? இவர்கள் அந்நியர்களாக ஆகிவிட்டது மட்டும் அன்று பகைவர்களாகவும் ஆகிவிட்டனர். ஏன்? அவன் தாயும், தந்தையுமாக உள்ள இராமனுக்குத் தீமை புரிகின்றவர்களை அவன் எவ்வாறு பார்த்துக்கொண்டு