பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 367 தான் இதுவரை பேசிய முறையை இராமன் மாற்றிக் கொண்டுவிட்டான். தசரதனையோ, பரதனையோ குறித்துப் பேசினால் இலக்குவன் கோபத்திற்கு எண்ணெய் ஊற்றியது போலாகிவிடும். ஆனால் அவர்களை விட்டுவிடவும் முடியாது. இதற்கு வழி என்ன? இதோ அற்புதமான வழியைக் கண்டு பேசுகிறான் மூத்தவன். "தம்பி! எனக்கு நல்ல அறிவுரைகளை, அன்றாடம் கூறி நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக வளர்த்த என் தந்தையின் கட்டளையை மீறி அரசை மறுபடியும் ஏற்பது எனக்குத் தக்கதன்று என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். காரணம் என் விழுப்பொருள் அதுதான். உன்னைப் பொறுத்தமட்டில் உன் விழுப் பொருள், என் ஒருவனை மட்டுமே பொறுத்துள்ளது. அப்படியானால் உன்னால் தாய், தந்தை, தெய்வம் என்று வழிபடப்படுகின்ற என் சொல்லைத் தட்டி நடப்பது உனக்கு முறையாகுமா? என் சொற்படி நடந்துகொண் டால் அதனால் உனக்கு ஏதேனும் ஊனம் உண்டாகு மென்று நினைக்கிறாயா?" என்ற பொருளில் 'தன் சொற்கள் தந்து ஆண்டு, நாளும் எனை வளர்த்த தாதைநன் சொல் கடந்து எற்கு அரசாள்வது தக்கது அன்றால்: என்சொல் கடந்தால், உனக்கு யாது உளது ஊனம்?' என்றான்; தென்சொல் கடந்தான், வடசொற் கடலுக்கு எல்லை தேர்ந்தான். (நகர் நீங்கு படலம்-130) சொல்லுஞ் சொல் வல்லானாகிய இராமன் ஒரு சில சொற்களைக் கூறுவதன் மூலம் தேவர் மூவரும் செய்ய முடியாத காரியத்தைச் செய்துவிட்டான். 'என் சொல்லைத் தட்டாமல் ஏற்றால் உனக்கு அதனால் என்ன இழுக்கு