பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 கம்பன் - புதிய பார்வை நேரப் போகிறது?’ என்ற வினாவில், ஒர் ஆணையல்லவா அடங்கி இருக்கிறது. ஆம்; இலக்குவனுடைய விழுப் பொருளுக்கு மதிப்புக் கொடுக்கும் முறையில், அவனை முற்றிலுமாக ஆட்படுத்திவிட்டான் இராமன். இதன் விளைவு என்ன தெரியுமா? சீற்றம் துறந்தான்; எதிர் நின்று, தெரிந்து செப்பும், மாற்றம் துறந்தான் மறை நான்கு என, வாங்கல் செல்லா நால் தெண் திரை வேலையின், நம்பி தன் ஆணையாலே, ஏற்றம் தொடங்காக் கடலின், தணிவு எய்தி நின்றான். (நகர் நீங்கு படலம்-137) உடனடியாக இலக்குவன் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லும் சினம் மறைந்துவிட்டது! அடங்கிய கடலைப்போல ஆகிவிட்டான் தம்பி, ஆம்! அவனுடைய விழுப்பொருளுக்கு, அவனால் வணங்கப்படும் அண்ணனே, இப்பொழுது மதிப்புக் கொடுத்துவிட்டான். இலக்குவன் விழுப்பொருள் என்று எதனை உயிரினும் மேலாகக் கொண்டிருந்தானோ அதற்கு மதிப்புக் கொடுப்பதன்மூலம், இராமன் இலக்குவனை இன்னும் நெருக்கத்திற்குக் கொண்டு வந்துவிட்டான். இலக்குவன், இராம அதுஜனாக ஆகிவிட்டான். ஒவ் வொரு வரும் தத்தம் விழுப்பொருளை விட்டுக் கொடுக்காமலே கூட உயிரினும் இனிய உறவுடன் இருக்க முடியும் என்பதைக் கம்பன் காட்டும் இடம் இது. மாபெரும் நிகழ்ச்சிகள் செய்யும் பரிசு ஒரே மனிதனுடைய வாழ்க்கையில் புதிய நிகழ்ச்சிகள் அவனுடைய பழைய விழுப்பொருள்களை மாற்ற