பக்கம்:கம்பன்-புதிய பார்வை.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அ. ச. ஞானசம்பந்தன் 369 உதவியாக இருக்கலாம். அந்த நிகழ்ச்சிகளைக் கண்ட, அல்லது கேட்ட அனைவருக்கும் அவை ஒரே மாதிரியான எதிர்த் தாக்குதல்களைத் தரவேண்டும் என்று நினைக்கக் கூடாது. உதாரணமாகக் கற்பைப் பற்றித் தமிழர்கள் எவ்வளவு உயர்வாகவும், இன்றியமையாத சிறப்பினை உடையதாகவும் நினைக்கிறார்களோ, அதே போன்ற நினைவுடையவர்தாம் மகாத்மா காந்தியும். நவகாளியில் நடை உலாச் செல்கையில், அடிகளாருக்குப் பல கடிதங்கள் வந்தன. இந்து முஸ்லிம் கலவரத்தில் கற்பழிக்கப்பட்ட சகோதரிகள் பலர் கருவுற்றுள்ளனர் என்றும், அவர்களை என்ன செய்யலாம் என்றும், பலர் அடிகளாரைக் கேட்டிருந்தனர். காந்திஜி என்ன பதில் எழுதினார் தெரியுமா? ஆண்மை உடையவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ளுபவர் யாவரும், அந்தப் பெண்களை மணஞ் செய்துகொண்டு வாழ வேண்டும்' என்று எழுதினார். பெரிய சனாதனிகள் என்று பறை சாற்றிக்கொண்டு கள்ள வாழ்க்கை வாழும் போலிகள் சிலர், ஆகா! காந்தி இந்து தர்மத்தை அழித்துவிட்டார். என்று காட்டுக் கூச்சல் போட்டனர். ஆனால் அடிகளாரின் அடிப்படை விழுப்பொருளையே மாற்றக் கூடிய, மாபெரும் கொடுமை நடந்துவிட்ட நிலைமையில், அடிகளார் தம் விழுப்பொருளை மாற்றிக்கொண்டார். இவ்வாறு மாற்றிக்கொண்டது அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்த அந்தக் குறிப்பிட்ட கால எல்லைக்கு மட்டுமே பொருந்தும். சூழ்நிலை காரணமாக இம்மாதிரியாகத் தற்காலிக மாற்றம் நிகழ்வதும் உண்டு. இதன் எதிராக, நடைபெற்ற நிகழ்ச்சி காரணமாக நிலையான விழுப்பொருள் மாற்றம் ஏற்படுவதும் உண்டு. நிலையான விழுப்பொருள் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு இரண்டு முக்கியமான சூழ்நிலைகள் வேண்டும். நிலையான விழுப்பொருளை அதுவரை கொண்டிருந்த